- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வெளியில் தெரியாது.. 3 ஃபார்மட் 3 வேலை.. ஜடேஜாவின் மதிப்பு என்னன்னு இந்திய அணிக்கு தெரியும்.. கம்பீர் பேட்டி

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி மார்ச் 9ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்தியா தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் ரவீந்திர ஜடேஜா இந்திய அணிக்காக வெளிப்படுத்தி வரும் நல்ல செயல்பாடுகளைப் பற்றி பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.

சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான இந்திய அணி வெளியிடப்பட்ட போது அக்சர் படேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டதால் ரவீந்திர ஜடேஜா எதற்கு? என்று சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். ஆனால் சமீபத்திய இங்கிலாந்து ஒருநாள் தொடரில் அசத்திய ஜடேஜா தம்முடைய தரத்தைக் காண்பித்தார். அதன் காரணமாக இந்தத் தொடரிலும் அவருக்கு பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

மதிப்புமிக்க ஜடேஜா:

அந்த வாய்ப்பில் 4 போட்டிகளில் 4* விக்கெட்டுகளை எடுத்துள்ள ஜடேஜா மிடில் ஓவர்களில் நன்றாக பவுலிங் செய்து வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். இருப்பினும் பேட்டிங்கில் கீழே களமிறங்குவதால் அவர் 18 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் ரவீந்திர ஜடேஜாவின் மதிப்பு என்ன என்பது வெளியில் இருப்பவர்களை விட இந்திய அணிக்குள் இருக்கும் தங்களுக்குத் தெரியும் என்று கம்பீர் பாராட்டியுள்ளார்.

குறிப்பாக 3 வகையான ஃபார்மெட்டிலும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய 3 துறைகளிலும் அசத்தக்கூடிய திறமை ஜடேஜாவிடம் இருப்பதாக அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் கம்பீர் பேசியது பின்வருமாறு. “ரவீந்திர ஜடேஜா எப்போதும் விமர்சனங்களை சந்திக்கிறார் என்று நான் கருதுகிறேன். நாங்கள் அவரைப் பற்றி உயர்வாகப் பேசுவதில்லை என்றும் நினைக்கிறேன்”

- Advertisement -

கம்பீர் பாராட்டு:

“ஆனால் இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் செய்துள்ளதைப் பாருங்கள். டெஸ்ட், டி20 அல்லது ஒருநாள் ஆகிய எந்த ஃபார்மட்டாக இருந்தாலும் இந்திய கிரிக்கெட்டுக்கு அவரது பங்கு முக்கியமானது. உலகக் கிரிக்கெட்டில் அவர் ஒரு டாப் ஆல் ரவுண்டராக விளையாடி வருகிறார். இந்திய அணியின் வெளியே என்ன நடக்கிறது என்ன பேசுகிறார்கள் என்பது பற்றி எங்களுக்குக் கவலையில்லை”

இதையும் படிங்க: அவர் ஆட்டநாயனாக வரலாம்.. நியூஸிலாந்து அணியால் மட்டுமே இந்தியாவை சாய்க்க முடியும்.. ரவி சாஸ்திரி

“இந்திய அணிக்குள் ரவீந்திர ஜடேஜாவின் முக்கியத்துவம் மற்றும் அவருடைய மதிப்பு என்பது எங்களுக்குத் தெரியும்” எனக் கூறினார். முன்னதாக 2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் ரவீந்திர ஜடேஜா அதிக விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அதனால் தங்கப் பந்து விருது வென்ற அவர் தோனி தலைமையில் இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -