அவர் ஆட்டநாயனாக வரலாம்.. நியூஸிலாந்து அணியால் மட்டுமே இந்தியாவை சாய்க்க முடியும்.. ரவி சாஸ்திரி

Ravi Shastri
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி மார்ச் 9ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் கோப்பையை வெல்லும் நோக்கத்துடன் மோதுகின்றன. இந்தத் தொடரின் லீக் சுற்றுப்போட்டியில் இதே துபாயில் நியூசிலாந்து அணியை இந்தியா தோற்கடித்தது. எனவே நியூசிலாந்து அணியை தோற்கடித்து இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை தோல்வியை சந்திக்காமல் வெற்றி நடை போடும் இந்தியாவை தோற்கடிக்கும் திறமைக் கொண்ட ஒரு அணியாக நியூசிலாந்து இருப்பதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். எனவே ஃபைனலில் இந்தியாவுக்கு சமமாக நியூசிலாந்தும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் இந்திய அணியில் ஜடேஜா அல்லது அக்சர் படேல் ஆட்டநாயகன் செயல்பாடுகளை வெளிப்படுத்தக் கூடும் என்று அவர் கணித்துள்ளார்.

- Advertisement -

சவாலான நியூஸிலாந்து:

மறுபுறம் நியூசிலாந்து அணியில் கிளன் பிலிப்ஸ் அதிரடியான ரன்கள் குவித்து சில விக்கெட்டுகளை எடுத்து சூப்பர்மேன் போல கேட்ச்களை பிடித்து ஆட்டநாயகன் விருதை வெல்ல வாய்ப்புள்ளதாகவும் சாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான அவர் இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு. “இத்தொடரில் ஒரு அணியால் இந்தியாவை தோற்கடிக்க முடியுமேயானால் அது நியூசிலாந்து”

“அதனால் இறுதிப் போட்டியில் கோப்பையை வெல்லக்கூடிய அணியாக இந்தியா ஆரம்பத்தில் மட்டுமே இருக்கும். தற்போதைய ஃபார்மில் விராட் கோலி – கேன் வில்லியம்சன் ஆகியோர் சூடாக இருக்கிறார்கள். எனவே அவர்களை 10 ரன்கள் அடிக்க விட்டு விட்டால் பின்னர் எதிரணி பிரச்சனையை சந்திக்கும். நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா சிறந்த இளம் வீரராக செயல்பட்டு வருகிறார்”

- Advertisement -

ஃபைனல் ஆட்டநாயகன்:

“இறுதிப் போட்டியில் ஆல் ரவுண்டர் ஆட்டநாயகனாக வரக்கூடும். இந்தியாவுக்காக அது அக்சர் பட்டேல் அல்லது ரவீந்திர ஜடேஜாவாக இருப்பார் என்று சொல்வேன். நியூசிலாந்தைப் பொறுத்த வரை கிளன் பிலிப்ஸ் தன்னிடம் எதையோ கொண்டுள்ளார். களத்தில் ஃபீல்டிங் செய்வதில் அவர் ஒளியின் வேகத்தில் அபாரமாக செயல்படுகிறார்”

இதையும் படிங்க: பைனல் மேட்ச்ல இதுமட்டும் நடந்தா ரோஹித்தோட கரியர் டோட்டலா ஓவர் – வெளியான லேட்டஸ்ட் தகவல்

“அதே போல பேட்டிங்கில் அதிரடியாக 40 – 50 ரன்களை எடுக்கக்கூடிய அவர் பந்து வீச்சில் ஓரிரு விக்கெட்டுகளை எடுத்து உங்களை ஆச்சரியப்படுத்தக் கூடும்” என்று கூறினார். முன்னதாக 2000 சாம்பியன்ஸ் ட்ராபி, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்களில் இந்தியாவை தோற்கடித்து நியூசிலாந்து கோப்பைகளை வென்றது. எனவே 2019 உலகக் கோப்பை செமி ஃபைனல் தோல்விக்கும் சேர்த்து இம்முறை நியூசிலாந்தை இந்தியா வீழ்த்த வேண்டும் என்பதே இங்குள்ள ரசிகர்களின் விருப்பமாகும்.

Advertisement