அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் பெஞ்சில் அமர வைக்கப்பட்டு.. ராணா செலக்ட்டானது ஏன்? கம்பீர் பேட்டி

Gautam Gambhir
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். பயிற்சியாளராக வந்தது முதல் ஹர்ஷித் ராணாவுக்கு அவர் 3 வகையான இந்திய அணியிலும் ஏராளமான வாய்ப்புகளை வழங்கி வருகிறார். அந்த வாய்ப்புகளில் பெரும்பாலான போட்டிகளில் அவர் சுமாராகவே விளையாடியுள்ளார். மறுபுறம் அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் கிடைக்கும் வாய்ப்புகளில் அபாரமாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகின்றனர்.

ஆனால் சாம்பியன் பிளேயர்களாக தங்களை நிரூபித்த பின்பும் அவர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைப்பதில்லை. அது பற்றி கேட்டதற்கு 23 வயது குழந்தை ராணாவை விமர்சிப்பது வெட்கக்கேடானது என்று கௌதம் கம்பீர் பதிலடி கொடுத்தார். இந்நிலையில் ஒரு அணிக்கு 11 பேரை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்பதால் சில நேரங்களில் அர்ஷ்தீப், குல்தீப் போன்றவர்கள் பெஞ்சில் அமர வைக்கப்படுவதாக கம்பீர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பெஞ்சில் அர்ஷ்தீப், குல்தீப்:

அதே சமயம் பெஞ்சில் அமர வைக்கப்படுவதற்கான காரணம் பற்றி வீரர்களிடம் தெளிவாக சொல்வதாகவும் கம்பீர் தெளிவுப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு பயிற்சியாளராக அது எனக்கு மிகவும் கடினமான பகுதியாகும். சில நேரங்களில் தகுதியான வீரர்கள் பெஞ்சில் அமர்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அனைவருமே பிளேயிங் லெவனில் விளையாடத் தகுதியானவர்கள் என்பதும் எனக்குத் தெரியும்”

“ஆனால் உங்களால் போட்டி நாளன்று நீங்கள் விரும்பும் வேலையைச் செய்வதற்கு தகுந்த 11 பேர் கொண்ட சேர்க்கையை மட்டுமே தேர்வு செய்ய முடியும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பெஞ்சில் அமரும் வீரர்களிடம் காரணத்தை தெளிவாக நேர்மையாக சொல்வது முக்கியம். ஆனால் ஒரு பயிற்சியாளராக அந்த வீரரிடம் நான் காரணத்தை சொல்வது மிகவும் கடினமானது”

- Advertisement -

கம்பீர் விளக்கம்:

“ஏனெனில் அணியில் விளையாடுவதற்கு தகுதியானவராக இருந்தும் பெஞ்சில் அமர வைக்கப்படுவதால் அந்த வீரர் ஏமாற்றத்தை சந்திப்பார். இருப்பினும் நீங்கள் நேராக நேர்மையாக இதயத்தில் இருந்து காரணத்தை சொல்லும் போது எங்களுடைய வீரர்கள் அதைப் புரிந்து கொள்வார்கள் என்று நான் கருதுகிறேன். அது வீரர் மற்றும் பயிற்சியாளருக்கிடையே இருக்க வேண்டும்”

இதையும் படிங்க: ஜடேஜா போனால் தான் அவருக்கு சான்ஸ் கிடைக்கும்.. சுப்மன் கில்லின் இந்த கேப்டன்சி சரில்ல.. அஸ்வின் பேட்டி

“மாறாக வெவ்வேறு கருத்துகளை சொல்லி அழும் விமர்சகர்களிடம் இருக்கக்கூடாது. அதை எங்களுடைய அணி மற்றும் பயிற்சியாளர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள். ஏனெனில் உங்களுடைய அணியின் மாற்றும் அறை வெளிப்படையானதாக, நேர்மையானதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட அணி இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறினார்.

Advertisement