இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. வரும் நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்கும் அத்தொடரில் சுப்மன் கில் தலைமையில் இந்தியா களமிறங்குகிறது. அத்தொடரில் உலக டெஸ்ட் சாம்பியன் தென்னாப்பிரிக்கா அணி சொந்த மண்ணில் இந்தியாவுக்கு பெரிய சவாலைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் புதிய கேப்டன் சுப்மன் கில் இந்திய மண்ணில் ஸ்பின்னர்களை குறைத்து மதிப்பிட்டு பயன்படுத்துவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சித்துள்ளார். குறிப்பாக இந்திய மண்ணில் கில் ஸ்பின்னர்கள் நீண்ட ஸ்பெல் வீசுவதற்கு அனுமதிப்பதில்லை என்று அவர் விமர்சித்துள்ளார். அத்துடன் அக்சர் படேலுக்கு ஆல் ரவுண்டராக அதிக வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
அஸ்வின் விமர்சனம்:
மேலும் தம்மைப் போலவே ரவீந்திர ஜடேஜா ஓய்வு பெற்ற சென்றால் மட்டுமே அக்சர் பட்டேலுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அக்சர் பட்டேல் அணியில் இருப்பது நன்றாகவே இருக்கும். நீங்கள் சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் குறைந்த வேகப்பந்து வீச்சாளர்களை விளையாட வைக்க விரும்பும் போது அவர் அணிக்குள் வருவார்”
“டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய பேட்டிங் மிகவும் அண்டர்ரேட்டட் என்பதை மறந்து விடாதீர்கள். 11வது இடத்தில் ஒரு எக்ஸ்ட்ரா ஸ்பின்னரை விளையாட வைப்பது உங்களுக்கு மற்ற பவுலர்களை இடது மற்றும் வலப்புறத்தில் சுழற்சி முறையில் பயன்படுத்த உதவும். ஆனால் கடந்த தொடரில் சுப்மன் கில் பவுலர்களை சுழற்சி முறையில் பயன்படுத்துவது சிறப்பாக இல்லை”
அக்சர் வாய்ப்பு:
“அவர் ஸ்பின்னர்களுக்கு நீண்ட ஸ்பெல் வழங்குவதில்லை. பவுலர்கள் சிறிய ஸ்பெல்களில் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அது வேலை செய்யாது. எனவே 5 பவுலர்கள் உங்களுக்கு போதுமான சமநிலையை வழங்குவார்கள் என்று நான் நம்புகிறேன். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சூழ்நிலைக்கு தகுந்தார் போல் இந்திய அணி தேர்வு செய்யப்படும்”
இதையும் படிங்க: விராட் 74, ரோஹித் 121 அடிச்சு என்ன பயன்? இந்தியா அதை செய்யாத வரை எனக்கு மகிழ்ச்சியில்லை.. கம்பீர் ஓப்பன்டாக்
“இம்முறை பந்து அதிகம் சுழலாமல் இருக்கலாம். எனவே எவ்வளவு ஸ்பின்னர்கள் தேவை என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள். புதிர் என்னவெனில் ஜடேஜா மற்றும் குல்தீப் கண்டிப்பாக விளையாட வேண்டும். வாஷிங்டன் சுந்தரும் விளையாட வேண்டும். ஜடேஜா இல்லாமல் இருந்தால் மட்டுமே அக்சர் பட்டேலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. நீங்கள் அதிக ஸ்பின்னர்களை வைத்து விளையாடினால் அவர்களை சுழற்சி முறையில் பயன்படுத்துவது பிரச்சனையாகும்” என்று கூறினார்.



