- Advertisement -
இந்திய கிரிக்கெட்

10 நாள்.. ஆஸ்திரேலியா அதை எப்படி கொடுத்தாலும் சரி.. இந்தியா இதை செஞ்சு ஜெயிக்கும்.. கம்பீர் உறுதி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் விரைவில் துவங்க உள்ளது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா சொந்த மண்ணில் ஒய்ட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல அந்தத் தொடரில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

பொதுவாக ஆஸ்திரேலியாவில் வேகத்துக்கு சாதகமான மைதானங்கள் இருப்பது வழக்கமாகும். அதில் இந்தியா போன்ற ஆசிய கண்டத்தை சேர்ந்த பேட்ஸ்மேன்கள் தடுமாறுவதும் வாடிக்கையாகும். அந்த சூழ்நிலையில் கடைசியாக நடைபெற்ற 2 தொடர்களிலும் இந்திய அணி ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக தோற்கடித்தது.

- Advertisement -

கம்பீர் உறுதி:

எனவே இம்முறை இந்தியாவை வீழ்த்துவதற்காக ஆஸ்திரேலியா எக்ஸ்ட்ரா வேகம், பவுன்ஸ் இருக்கக்கூடிய பிட்ச்களை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் தொடர்களில் எப்போதும் முதல் போட்டி அடிலெய்ட் நகரில் நடைபெறுவது வாடிக்கையாகும். ஆனால் இம்முறை இந்தியாவை வீழ்த்துவதற்காகவே இயற்கையாகவே வேகம் அதிகமாக இருக்கக்கூடிய பெர்த் மைதானத்தில் முதல் போட்டியை ஆஸ்திரேலியா நடத்த உள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா பிட்ச் எப்படி கொடுத்தாலும் அதில் விளையாடி இந்தியா வெல்லும் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உறுதியாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் பிட்ச்சில் எந்த கட்டுப்பாட்டையும் கொண்டிருக்க போவதில்லை. நாங்கள் எந்த வகையான பிட்ச்சிலும் விளையாடுவதற்கு தயாராக உள்ளோம்”

- Advertisement -

இந்தியா தயார்:

“எனவே எம்மாதிரியான பிட்ச்களை கொடுக்கலாம் என்பதை தேர்ந்தெடுப்பது ஆஸ்திரேலியாலின் விருப்பம். நாங்கள் எந்த வகையான சூழலிலும் அசத்துவதற்கு தயாராக உள்ளோம். ஏனெனில் எங்களிடம் அனைத்து அடிப்படைகளும் பூர்த்தியாகி உள்ளது. அதனால் எங்களுடைய திறமைக்கு விளையாடினால் அவர்களை எங்களால் வீழ்த்த முடியும். தொடருக்கு முன்பாக நாங்கள் 10 நாட்கள் நல்ல பயிற்சிகளை எடுக்க உள்ளோம்”

இதையும் படிங்க: 2026 டி20 உ.கோ இருக்கட்டும்.. அந்த தொடரில் சக்ரவர்த்தி ஆடலன்னா இழப்பு இந்தியாவுக்கே.. டிகே வெளிப்படை

“அதனால் எங்களால் நல்ல வடிவத்துக்கு வர முடியும் என்று நினைக்கிறேன். இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் விளையாடிய நிறைய வீரர்களும் எங்களிடம் அணியில் உள்ளார்கள். அவர்களுடைய அனுபவம் எங்களுடைய இளம் வீரர்களுக்கு உதவி செய்ய வரும். எனவே 10 நாட்கள் நல்ல பயிற்சிகளை எடுத்தால் நவம்பர் 22 காலை நாங்கள் முதல் போட்டியில் முதல் பந்தில் இருந்தே அசத்துவதற்கு தயாராக இருக்க முடியும்” என்று கூறினார்.

- Advertisement -