2026 டி20 உ.கோ இருக்கட்டும்.. அந்த தொடரில் சக்ரவர்த்தி ஆடலன்னா இழப்பு இந்தியாவுக்கே.. டிகே வெளிப்படை

Dinesh Karthik
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா இரண்டாவது போட்டியில் தோல்வியை சந்தித்தது. நவம்பர் 10ஆம் தேதி கிபர்ஹா நகரில் நடைபெற்ற 2வது போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்தியா ஹர்திக் பாண்டியா 39* ரன்கள் எடுத்த உதவியுடன் 125 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

பின்னர் சேசிங் செய்த தென்னாபிரிக்கா அணிக்கு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை எடுத்து பெரிய சவாலை கொடுத்தார். குறிப்பாக ஹென்றிச் க்ளாஸென், டேவிட் மில்லர், ஹென்றிக்ஸ் போன்ற அதிரடி வீரர்களை அவர் சொற்ப ரன்களில் காலி செய்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அதை வீணடிக்கும் வகையில் ஆவேஷ் கான் – அர்ஷ்தீப் சிங் சுமாராக பந்து வீசினார்கள்.

- Advertisement -

சக்ரவர்த்தி அசத்தல்:

அதைப் பயன்படுத்திய ட்ரிஷன் ஸ்டப்ஸ் 47*, ஜெரால்டு கோட்சி 19* ரன்கள் விளாசி தென்னாபிரிக்காவை வெற்றி பெற வைத்தார்கள். அதனால் 1 – 1* (4) என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது. மறுபுறம் முழுமூச்சுடன் வெற்றிக்கு போராடிய வருண் சக்கரவர்த்தி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தோல்வியை சந்தித்த போட்டியில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த வீரர் என்ற பரிதாபமாக சாதனை படைத்தார்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் அசத்தியதால் 2021 டி20 உலகக் கோப்பையில் அவர் இந்தியாவுக்காக ஆச்சரியப்படும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் அந்த வாய்ப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால் உடனடியாக வருண் சக்ரவத்தி கழற்றி விடப்பட்டார். இருப்பினும் கடந்த ஐபிஎல் தொடரில் அவர் மீண்டும் கொல்கத்தா அணிக்காக அசத்தினார்.

- Advertisement -

டிகே கருத்து:

அதனால் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்ததும் அவரை மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டு வந்தார். அந்த வாய்ப்பில் இதுவரை அவர் 5 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். அதனால் 2026 டி20 உலகக் கோப்பையில் அவர் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் வருண் சக்கரவர்த்தியை தேர்ந்தெடுக்கவில்லை என்றால் அது இந்தியாவுக்கு இழப்பாக இருக்கும் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கம்பீர் எனக்கு கொடுத்த ரோல் இதுதான்.. அதனால் தான் 5 விக்கெட்டை எடுக்க முடிந்தது – வருண் சக்கரவர்த்தி

இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டது பின்வருமாறு. “ஒருவேளை இந்தியா சாம்பியன்ஸ் ட்ராபிக்கு வருண் சக்ரவர்த்தியை தேர்ந்தெடுக்கவில்லையெனில் அது அவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறாக இருக்கும். அவர் தற்போது அற்புதமான பவுலராக திரும்பி வந்துள்ளார்” என்று கூறியுள்ளார். இதையடுத்து மூன்றாவது போட்டி நவம்பர் 13ஆம் தேதி நடைபெறுகிறது.

Advertisement