இதனால தான் மோர்கலை பவுலிங் பயிற்சியாளராக செலக்ட் பண்ணீங்களா? வைரலாகும் கம்பீரின் 2017 பேட்டி

Gautam Gambhir 3
- Advertisement -

ஐசிசி 2024 உலகக் கோப்பை வெற்றியுடன் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஜாம்பவான் ராகுல் டிராவிட் விடை பெற்றார். அவரைத் தொடர்ந்து கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஐபிஎல் தொடரில் கேப்டனாகவும் ஆலோசகராகவும் 3 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

அதனால் புதிய பயிற்சியாளராக நியமித்த பிசிசிஐ கௌதம் கம்பீர் தமக்கு தகுந்த துணை பயிற்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் சலுகையை வழங்கியது. அதன் காரணமாக அபிஷேக் நாயர், ரியான் டச்ஸேட் ஆகியோரை துணை பயிற்சியாளர்களாக தேர்ந்தெடுத்த கம்பீர் தென்னாப்பிரிக்க முன்னாள் மோர்னே மோர்கலை பவுலிங் பயிற்சியாளராக தேர்ந்தெடுத்துள்ளார். அதை இன்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதி செய்துள்ளார்.

- Advertisement -

தேர்வுக்கான காரணம்:
இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் நடைபெறும் வங்கதேச டெஸ்ட் தொடரிலிருந்து மோர்னே மோர்கெல் இந்திய கிரிக்கெட் அணியுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். இந்நிலையில் தாம் எதிர்கொண்ட பவுலர்களிலேயே மிகவும் கடினமானவர் மோர்னே மோர்கல் என்று 2017ஆம் ஆண்டு கொடுத்த ஒரு பேட்டியில் கௌதம் கம்பீர் கூறியுள்ளார். அதனாலேயே கொல்கத்தா அணியில் தமது தலைமையில் விளையாட அவரை வாங்கியதாகவும் கம்பீர் கூறினார்.

இது பற்றி 2017இல் பிரபல தொகுப்பாளர் கெளரவ் கபூர் யூடியூப் சேனலில் கம்பீர் பேசியது பின்வருமாறு. “தென் ஆப்பிரிக்காவின் மோர்னே மோர்கல் நான் எதிர்கொண்டதிலேயே மிகவும் போட்டி மிகுந்தவர். உண்மையில் அதனாலேயே அவரை நான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கொண்டு வந்தேன். நான் எதிர்கொண்டதிலேயே மிகவும் கடினமான பவுலரும் அவர் தான்”

- Advertisement -

“டெல்லி அணிக்காக மோர்கெல் விளையாடிய போதும் இவர் என்னுடைய அணியில் இருந்திருக்க வேண்டும் என்று நான் நினைப்பேன்” எனக் கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதைப் பார்க்கும் ரசிகர்கள் இதனால் தான் அவரை கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்ந்தெடுத்துள்ளார் என்று பேசுகின்றனர்.

இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக பாகிஸ்தான் செய்துள்ள சிறப்பு ஏற்பாடு.. ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது – விவரம் இதோ

மறுபுறம் கம்பீர் பாராட்டும் அளவுக்கு 86 டெஸ்ட், 117 ஒருநாள், 44 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள மோர்கெல் 309, 188, 47 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். குறிப்பாக டேல் ஸ்டைனுக்கு நிகராக 2010 – 2015 காலகட்டங்களில் மிரட்டிய அவர் 2015 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா செமி ஃபைனல் செல்ல உதவினார். அந்தளவுக்கு தரத்தைக் கொண்டிருக்கும் அவர் தற்போது இந்திய அணியில் பயிற்சியாளராக செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement