கேட்ச் தவறுவது சகஜம்.. அதை விட 140 கோடி இந்தியர்கள் வலிக்க தோற்க இதான் காரணம்.. கம்பீர் பேட்டி

Gautam Gambhir
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. ஜூன் 20ஆம் தேதியில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அந்தத் தோல்விக்கு பேட்டிங் துறையில் நன்றாக ஃபினிஷிங் செய்ய தவறியதும் ஜெய்ஸ்வால் 4 கேட்ச்களை தவற விட்டதும் முக்கிய காரணமாக அமைந்தது.

அதனால் இப்போட்டியில் மொத்தமாக 7 கேட்ச்களை தவற விட்ட இந்திய அணியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் கிரிக்கெட்டில் அனுபவ வீரர்கள் முதல் புதிய வீரர்கள் வரை அனைவரும் கேட்ச்கள் தவற விடுவது சகஜம் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இந்தப் போட்டியில் பேட்டிங்கில் ஃபினிஷிங் செய்யத் தவறியது தங்களுடைய தோல்விக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

கேட்ச்கள் தவறுவது இயல்பு:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கேட்ச்கள் தவற விடப்படும். உலகின் சிறந்த வீரர்களும் கேட்ச்களை விட்டுள்ளார்கள். ஆனால் அவர்களில் யாருமே தோற்க வேண்டும் என்பதற்காக கேட்ச்களை விடமாட்டார்கள். ஆம் பேட்டிங் பொறுத்த வரை எங்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. முதல் இன்னிங்ஸில் 40 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்த நாங்கள் 2வது இன்னிங்ஸில் 30 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை விட்டோம்”

“முதல் இன்னிங்சில் நாங்கள் 600 ரன்கள் அடிக்கும் வாய்ப்பைப் பெற்றோம். அதை செய்திருந்தால் நாங்கள் பெரிய வெற்றியைப் பெற்றிருப்போம். ஆனால் கிரிக்கெட்டில் இதெல்லாம் நடக்கக் கூடியதாகும். இதிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு முன்னேறுவோம் என்று நம்புகிறேன். எங்களுடைய வீரர்கள் முயற்சி செய்யவில்லை என்று அர்த்தமல்ல”

- Advertisement -

கம்பீர் ஆதரவு:

“சில நேரங்களில் மக்கள் தோல்வியை சந்திப்பார்கள். அதற்காக ரசிகர்கள் தான் அவர்களைக் காட்டிலும் அதிக ஏமாற்றத்தையும் சந்திப்பார்கள். நாங்கள் முதல் இன்னிங்சில் 570 – 580 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். சில நேரங்களில் எங்களுடைய டாப் ஆடரும் தோல்வியை சந்தித்திருக்கிறது. அது மட்டுமே எங்களுடைய தோல்விக்கு காரணமல்ல. இதிலிருந்து எங்கள் டெய்ல் எண்டர்கள் பாடங்களைக் கற்று பேட்டிங்கில் பங்காற்றுவார்கள் என்று நம்புகிறேன்”

இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் விரேந்தர் சேவாக்கின் சாதனையை சமன் செய்த கே.எல் ராகுல் – விவரம் இதோ

“அதற்காக நாங்கள் யாரும் இப்படியே உட்காரப் போவதில்லை. அணியாக தோற்கும் நாங்கள் அணியாக வெல்வோம். இளம் அல்லது மூத்த அணி என்றவற்றை தாண்டி ஒவ்வொரு தோல்வியும் எங்களுக்கு வலியைக் கொடுக்கும். ஏனெனில் இது இந்திய அணி. இங்கே தோல்வியை சமாளிக்க சாக்கு செல்வதற்கு எதுவுமில்லை. ஏனெனில் நாங்கள் 140 கோடி இந்தியர்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறோம்” என்று கூறினார்.

Advertisement