- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பஸ்பால் ஜெய்க்கவே முடியாது.. இது தான் இந்தியாவின் வேற லெவல் ஸ்டைல்.. இங்கிலாந்துக்கு கம்பீர் பதிலடி

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரில் சமீபத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதைப் போல இந்தியாவையும் தோற்கடிப்போம் என்று வங்கதேச அணியினர் சவால் விடுத்தனர். ஆனால் கடந்த மார்ச் மாதம் பஸ்பால் எனப்படும் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை பின்பற்றி இந்தியாவை வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து சவால் விடுத்ததாக கேப்டன் ரோஹித் சர்மா நேற்று முன்தினம் தெரிவித்தார்.

இருப்பினும் செயலில் கவனம் செலுத்திய இந்தியா கடைசியில் 4 – 1 (5) என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்ததாக ரோஹித் கூறினார். அதே போல வங்கதேசம் ஜாலியாக சவால் விடட்டும் கடைசியில் இந்தியாவே வெல்லும் என்று ரோஹித் சர்மா நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் அல்லாமல் எப்போதும் ஒரே மாதிரியான ஸ்டைலில் விளையாடினால் வெல்ல முடியாது என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கெளதம் கம்பீர் பதிலடி:

அத்துடன் விளையாட்டில் வெற்றிக்காக விளையாடும் ஒரே ஸ்டைல் மட்டுமே எப்போதும் வெல்லும் என்று கம்பீர் கூறியுள்ளார். அதுவே இந்தியாவின் ஸ்டைல் என்று தெரிவிக்கும் அவர் இங்கிலாந்தின் பஸ்பால் அணுகுமுறைக்கு சென்னை டெஸ்ட் போட்டிக்கு முன் பதிலடி கொடுத்தது பின்வருமாறு. “வெற்றி பெறும் ஸ்டைல் தான் சிறந்த ஸ்டைல் என்று நான் எப்போதும் நம்புபவன்”

“எப்போதும் ஒரு ஸ்டைலுக்குள் உட்படுத்திக் கொள்வதற்கு பதிலாக சூழ்நிலைகளை வேகமாக கற்றுக்கொண்டு முன்னேறும் அணியாக நாங்கள் இருக்க விரும்புகிறோம். நீங்கள் ஒரு ஸ்டைலை பின்பற்றி வரும்பினால் அதில் முன்னேற்றம் இருக்காது. நாங்கள் சூழ்நிலைகள், கால நிலவரங்கள் ஆகியவற்றை பின்பற்றி ஒவ்வொரு நாளும் முன்னேறும் வீரர்களையே விரும்புகிறோம்”

- Advertisement -

இந்தியாவின் ஸ்டைல்:

“அது தான் மிகவும் முக்கியம். அதை செய்யாமல் ஒரு ஸ்டைலுக்கு பெயரை சூட்டுபவர்கள் ஒரு வழியில் மட்டுமே விளையாடுவார்கள். உண்மையில் விளையாட்டு என்பது வெற்றி முடிவுகளை பொறுத்தது. அதில் ஏற்கனவே சொன்னது போல் வெற்றி பெறும் ஸ்டைல் தான் எப்போதும் சிறந்த ஸ்டைல்” என்று கூறினார்.

இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட்டில் இதை மாற்றிய பெருமை பும்ரா, அஸ்வின், ஜடேஜாவை சேரும்.. பயிற்சியாளர் கம்பீர் பாராட்டு

அந்த வகையில் அதிரடியாக விளையாடுகிறோம் என்று சொன்ன இங்கிலாந்து இதுவரை ஒரு முறை கூட டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற்றதில்லை. ஆனால் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடும் இந்தியா 2021, 2023 ஆகிய அடுத்தடுத்த ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அந்த வரிசையில் 2025 ஃபைனலுக்கும் இந்தியா தகுதி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

- Advertisement -