
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களது 2வது போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. சில மாதங்களுக்கு முன்பாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நடத்தியத் தாக்குதலில் 26 இந்திய மக்கள் இயற்கை எய்தினர். அதற்கு இந்திய அரசாங்கம் ராணுவ நடவடிக்கைகள் எடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. அதனால் ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடக்கூடாது என்ற குரல் எழுந்தன.
இருப்பினும் இந்திய அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்திய அணி விளையாடி பரம எதிரி பாகிஸ்தானை தோற்கடித்து அசத்தியது. ஆனால் அப்போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணிக்கு இந்திய அணியினர் கை கொடுக்காமல் வெளியேறியது பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு களத்திற்கு வெளியே எல்லையில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
களத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி பதிலடி கொடுப்பதற்காகவே இப்போட்டியில் விளையாட இந்தியா சம்மதித்ததாகவும் அவர் அறிமுகமாக கூறியுள்ளார். அந்தளவுக்கு அப்போட்டியை இந்தியா முக்கியமாக கருதியதாக தெரிவிக்கும் கம்பீர் இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இந்தப் போட்டி முக்கியமாக இருந்தது. ஏனெனில் ஒரு அணியாக நாங்கள் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்கள் ஒற்றுமையைக் காட்ட விரும்பினோம்”
“அதை விட ஆப்ரேஷன் சிந்தூரில் வெற்றிகரமாக செயல்பட்ட ராணுவத்திற்கு நாங்கள் நன்றி செய்ய விரும்பினோம். நாங்கள் எங்களுடைய நாட்டை பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க முயற்சிக்கிறோம் என்று சொல்வேன். எங்களது அணியிடம் இதை விட சிறந்த செயல்திறனை நீங்கள் கேட்க முடியாது. குறிப்பாக எங்களது பவுலர்கள் பவுலிங் செய்த விதம் சிறந்தது”
“ஜஸ்ப்ரித் பும்ரா, ஸ்பின்னர்கள் மற்ற பவுலர்கள் சேர்ந்து எதிரணியை 128க்கு சுருட்டிய நீங்கள் உங்களுடைய பேட்டிங் வரிசைக்கு ஆதரவளிக்க வேண்டும். பேட்டிங்கில் நாங்கள் துவங்கிய விதத்தை அனைத்து நல்ல அணிகளும் செய்யும். அவர்கள் அனைத்து நாட்களும் திரும்பி சரியான விஷயங்களை செய்வார்கள். பயிற்சியாளராக எனக்கு நல்ல நாட்களும் மோசமான நாட்களும் அமையும். அப்போதெல்லாம் நீங்கள் நேர்மையுடன் இருப்பது மிகவும் முக்கியம்”
இதையும் படிங்க: இந்திய அணியின் லக்கி சார்ம்னா அது ஷிவம் துபே தான்.. வெளியான வியக்க வைக்கும் – புள்ளி விவரம்
“உடைமாற்றும் அறையில் மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் நேர்மை இருக்க வேண்டும். நீங்கள் வர்ணனையாளர் அல்லது ஸ்டுடியோ அல்லது எங்கிருந்தாலும் இந்திய கிரிக்கெட்டை தொடர்ந்து நிரப்ப நேர்மை தேவை. ஏனெனில் நீங்கள் ஆரஞ்சுப் பழங்களை ஆரஞ்சுடன் மட்டுமே ஒப்பிட முடியும். ஆரஞ்சை ஆப்பிள் பழங்களுடன் ஒப்பிட முடியாது” என்று கூறினார்.