டிராவிட் மாதிரி கிடையாது.. பும்ராவை தவிர விராட், ரோஹித்துக்கு சலுகையில்லை.. கம்பீர் அதிரடி அறிவிப்பு

Gautam Gambhir 44
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் வந்ததும் இந்திய அணியில் சில அதிரடியான மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது. முதலில் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மாவுக்கு பின் புதிய டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அவரிடம் இருந்த துணை கேப்டன்ஷிப் பதவியும் மொத்தமாக பறிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கௌதம் கம்பீர் பரிந்துரையில் சூரியகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் புதிய கேப்டன் மற்றும் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடாததால் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். ஆனால் 2024 ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்ற அவரை மீண்டும் கம்பீர் இந்திய அணிக்குள் கொண்டு வந்துள்ளார்.

- Advertisement -

கம்பீரின் கிட்டுக்குப்பிடி:
அவருடைய முடிவில் அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இலங்கைத் தொடரில் கழற்றி விடப்பட்டது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. முன்னதாக 2024 இலங்கை ஒருநாள் தொடரில் விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு பிசிசிஐ ஓய்வு கொடுக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. குறிப்பாக தற்சமயத்தில் இலங்கை பலவீனமாக உள்ளதால் சீனியர்களுக்கு ஓய்வு கொடுத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க பிசிசிஐ முடிவெடுத்திருந்தது.

சொல்லப்போனால் ராகுல் டிராவிட் தலைமையில் கடந்த 2 – 3 வருடங்களாக முக்கியமற்ற தொடர்களில் விராட் மற்றும் ரோஹித் சர்மா ஓய்வெடுத்தனர். ஆனால் தற்போது ஜஸ்ப்ரித் பும்ராவை தவிர்த்து விராட், ரோஹித் ஆகியோர் இந்தியாவுக்காக தொடர்ந்து விளையாட வேண்டும் என்று கம்பீர் அறிவித்துள்ளார். அதனாலேயே ஆரம்பத்தில் ஓய்வெடுக்க முடிவெடுத்திருந்த அவர்களை கம்பீர் தற்போது இலங்கைத் தொடரில் வலுக்கட்டாயமாக விளையாட வைக்க உள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ராவின் பணிச்சுமை மிகவும் முக்கியம். ஆனால் தொடர்ச்சியாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் இருந்தால் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவதை விரும்புகிறோம். குறிப்பாக விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் விளையாடப் போவதில்லை. எனவே அவர்கள் பெரும்பாலான போட்டிகளில் விளையாடுவார்கள் என்று நம்புகிறேன்”

இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு லாலிபாப் கொடுக்குறாங்க.. அவரை மீறி இந்தியாவை ஒன்னும் செய்ய முடியாது.. பசித் அலி ஆதங்கம்

“எனவே ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் 2027 உலகக் கோப்பை வரை விளையாடலாம் . பும்ரா அரிதான பவுலர். எனவே புத்துணர்ச்சியுடன் அவருடைய பணிச்சுமையை நிர்வகிப்பது மிகவும் முக்கியம். அவர் மட்டுமல்ல நான் எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்களை கவனிப்பது மிகவும் முக்கியம்” என்று கூறினார். மொத்தத்தில் தொடர்ந்து விளையாடினால் மட்டுமே விராட், ரோஹித்துக்கு 2027 உலகக் கோப்பை வாய்ப்பு கிடைக்கும் என்று கம்பீர் மறைமுகமாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement