பாகிஸ்தானுக்கு லாலிபாப் கொடுக்குறாங்க.. அவரை மீறி இந்தியாவை ஒன்னும் செய்ய முடியாது.. பசித் அலி ஆதங்கம்

Basit Ali
- Advertisement -

பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடுவது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2008க்குப்பின் எல்லை பிரச்சினை காரணமாக பாகிஸ்தானுக்கு செல்வதை நிறுத்தியுள்ள இந்தியா 2012க்குப்பின் இருதரப்பு தொடர்களில் மோதுவதையும் நிறுத்தி வைத்துள்ளது. இருப்பினும் ஐசிசி மற்றும் ஆசிய தொடர்களில் மட்டும் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா பொதுவான இடத்தில் விளையாடி வருகிறது.

குறிப்பாக பாகிஸ்தானில் 2023 ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெற்றது. ஆனால் அங்கு சென்று விளையாடாத இந்தியா தங்களுடைய போட்டிகளை இலங்கையில் விளையாடி வெற்றியும் கண்டது. எனவே இம்முறையும் தங்களுடைய சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்துமாறு ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

லாலிபாப் வேலை:
மறுபுறம் இந்தியா வராவிட்டால் அவர்களை புறக்கணித்து விட்டு தொடரை நடத்துவோம் என்று பாகிஸ்தான் வாரிய தலைவர் மோசின் நக்வி தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சொன்னால் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் அனைத்து டாப் நாடுகள் பாகிஸ்தானுக்கு வர மாட்டார்கள் என முன்னாள் வீரர் பஷித் அலி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவுக்கு எதிராக எங்கள் நாட்டில் வந்து இருதரப்பு தொடரில் விளையாடுங்கள் என பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வாரியங்கள் சமீபத்தில் அழைப்பு விடுத்தன. ஆனால் அது வாயில் லாலிபாப் கொடுக்கும் வேலை என்று தெரிவிக்கும் பசித் அலி தங்களை புறக்கணிக்கும் இந்தியாவுடன் வெளிநாட்டு மண்ணில் கூட பாகிஸ்தான் விளையாடக் கூடாது என கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஜெய் ஷா என்ன சொல்கிறாரோ அதை 5 – 6 வாரியங்கள் அப்படியே பின்பற்றும். ஒருவேளை பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி நடக்கும் என்று அவர் சொன்னால் அதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஒருவேளை இந்தியாவின் போட்டியில் பாகிஸ்தானுக்கு வெளியே நடைபெறும் என்று அவர் சொன்னாலும் அதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்”

இதையும் படிங்க: முன்னேற வேண்டியது கம்பீர் இல்ல.. பெரிய வேலையில் என்னோட கோச்சிங் இப்படித் தான் இருக்கும்.. கம்பீர் அதிரடி

“ஏனெனில் இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஐபிஎல் தொடரை வைத்து பிசிசிஐ பெரிய தொகையை கொடுக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி முடிந்ததும் எங்கள் நாட்டில் இந்தியாவுடன் இருதரப்பு தொடரில் விளையாடுங்கள் என்று சொல்லி பாகிஸ்தான் வாரியத் தலைவர் மோசின் நக்விக்கு மற்ற வாரியங்கள் லாலிபாப்பை கொடுத்துள்ளனர். ஆனால் இரு தரப்பு தொடர்கள் ஒன்று இந்தியா அல்லது பாகிஸ்தானில் நடைபெற வேண்டும். 3வது நாட்டில் விளையாட இந்தியா விரும்பினால் அதற்கு பாகிஸ்தான் சம்மதிக்கக் கூடாது” என்று கூறினார்.

Advertisement