அப்படி என்ன கோபமோ, தோனியின் மீது மீண்டும் வன்மத்தை காட்டிய கம்பீர் – ரசிகர்கள் அதிருப்தி

Gambhir-1
- Advertisement -

இந்தியாவில் இன்று கிரிக்கெட் இந்தளவுக்கு ஆழமாக வேரூன்ற காரணமாக அமைந்த 1983 உலகக் கோப்பை வெற்றிக்குப் பின் 28 வருடங்களாக அடுத்த கோப்பையை வெல்ல முடியாமல் தவித்த இந்திய அணி கடந்த 2011இல் சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையில் எம்எஸ் தோனி தலைமையில் அனுபவமும் இளமையும் கலந்த வீரர்களுடன் அற்புதமாக செயல்பட்டு சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. வீரேந்திர சேவாக், விராட் கோலி ஆகியோரது சதங்களுடன் துவங்கிய அந்த தொடரில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கரின் சதங்களும் ஜாஹீர் கான், ஹர்பஜன் சிங் போன்ற மூத்த வீரர்களின் சிறப்பான பந்துவீச்சும் யுவராஜ் சிங்கின் ஆல்-ரவுண்ட் செயல்பாடுகளும், சுரேஷ் ரெய்னாவின் முக்கிய ரன்களும் இந்தியாவை பைனலுக்கு அழைத்துச் சென்றனர்.

அப்படி அனைத்து வீரர்களின் பங்களிப்பால் ஃபைனல் சென்ற இந்தியா இலங்கைக்கு எதிராக சேசிங் செய்யும் போது சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் ஆகியோரது விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கி நங்கூரமாக செயல்பட்ட கௌதம் கம்பீர் சதத்தை தவறவிட்டாலும் 97 ரன்கள் குவித்து வெற்றி உறுதி செய்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். அவருடைய போராட்டத்தை வீணாடிக்காத வகையில் யுவராஜ் சிங்க்கு முன்பாக களமிறங்கிய கேப்டன் எம்எஸ் தோனி அதிரடியாக செயல்பட்டு 91* ரன்களை குவித்து யாராலும் மறக்க முடியாத சிக்சருடன் பினிஷிங் செய்து வெற்றிபெற வைத்தார்.

- Advertisement -

செல்பிஷ் பட்டம்:
கிரிக்கெட்டில் பினிஷிங் செய்ய முடியாத எத்தனையோ வெற்றி கைக்கு வந்து வாய்க்கு வராமல் போனதால் அன்றைய நாளில் ஃபினிசிங் செய்த தோனி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். அதனால் 2011 உலகக் கோப்பை என்று சொன்னாலே சிக்சருடன் கொடுத்த தோனியின் பினிஷிங் தான் அனைவருடைய மனதிலும் வந்து போகும். ஆனால் அந்தத் தொடர் முழுவதும் பார்மின்றி ரன்களை குவிக்க திண்டாடிய அவர் பைனலில் மட்டும் அடித்து பெயர் எடுத்துச் சென்றதாக நாட்டுக்காக உலகக்கோப்பையை வென்றும் கடந்த 10 வருடங்களாக “செல்பிஷ்” என்ற பட்டத்தை சுமந்து வருகிறார்.

அந்த உலக கோப்பையில் அனைவரும் வெற்றிக்கு பங்காற்றினார்கள் என்றாலும் அனைவரையும் சிறப்பாக வழிநடத்தி முக்கிய முடிவுகளை எடுத்து அற்புதமாக கேப்டன்ஷிப் செய்த தோனியும் வெற்றிக்கு முக்கிய காரணமானவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் அவர் மட்டும் ஒற்றைக் கையில் உலக கோப்பையை வென்றாரா? என்ற விமர்சனங்கள் தொடர்கிறது. இத்தனைக்கும் நான் ஒற்றைக் கையில் உலக கோப்பையை வென்று கொடுத்தேன் என்று தோனி எப்போதும் சொன்னது கிடையாது.

- Advertisement -

வன்மத்துடன் கம்பீர்:
இருப்பினும் அந்த உலகக் கோப்பைக்கு பின் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக கழற்றிவிடப்பட்ட சில சீனியர் வீரர்கள் தோனி மீது கடந்த 10 வருடங்களாக அவ்வப்போது நிறைய தருணங்களில் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக 97 அடித்தும் தமக்கு ஆட்டநாயகன் விருது கிடைக்காத விரக்தியை பலமுறை முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் அப்பட்டமாக வெளிப்படுத்தி வருவது அனைத்து ரசிகர்களும் அறிவார்கள்.

இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பிரபல ஓரியோ பிஸ்கட்டை அறிமுகப்படுத்திய தோனி 2011இல் இதேபோல் முதல் முறையாக இந்தியாவில் ஓரியோ பிஸ்கட் அறிமுகப்படுத்தப்பட்டபோது இந்தியா உலக கோப்பையை வென்றதால் விரைவில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையை அதனுடன் தொடர்பு செய்து பாருங்கள் என்று ஒரு ரசிகனை போல் பேசியிருந்தார். அவருடைய பேச்சு “செல்பிஷ்” பட்டம் கொடுத்த அதே குழுவினருக்கு மத்தியில் கிண்டல்களுக்கு உள்ளானது.

அந்த நிலையில் தனது வீட்டில் உள்ள நாய்களுக்கு ஓரியோ என்ற பெயரை வைத்து அதை தனது மகளுடன் கொண்டாடும் வீடியோவை தற்போது கௌதம் கம்பீர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 2011 உலக கோப்பை வெற்றிக்கு ஓரியோ பிஸ்கட் அறிமுகமானது தான் காரணம் என்ற வகையில் தோனி பேசிய அடுத்த சில நாட்களில் அவர் இந்த வீடியோவை வெளியிட அதற்கு ஹர்பஜன் லைக் போட்டுள்ளார்.

இதை பார்க்கும் ரசிகர்கள் இதுநாள் வரை இந்த வீடியோவை வெளியிடாமல் இப்போது வேண்டுமென்றே வெளியிடுவதை பார்த்தால் தோனியின் கருத்துக்கு மறைமுகமான எதிர்ப்பு தெரிவிப்பதை போல் உள்ளதாக சமூக வலைதளங்களில் கலாய்க்கிறார்கள். மேலும் 10 வருடங்கள் கழித்தும் இன்னும் என்ன வன்மமோ, கோபமோ என்றும் அவர் மீது ரசிகர்கள் சலித்துக் கொள்கிறார்கள்.

Advertisement