
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி துவங்க இருக்கும் இந்த தொடருக்காக தற்போது இந்திய அணி தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில் இந்திய ஏ அணியானது இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு பயிற்சி போட்டிகளிலும் விளையாடி முடித்துள்ளது.
அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த பயிற்சி போட்டியில் ஒரு சில வீரர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தாலும் நட்சத்திர துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் செயல்பாடு பெரியளவில் திருப்தியாக அமையவில்லை என்று தெரிகிறது. ஏனெனில் இந்த பயிற்சி போட்டியில் நான்கு இன்னிங்ஸ்களில் அவர் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார்.
அதுதவிர்த்து பெரிய அளவில் ரன்களை குவிக்காமல் தடுமாற்றத்தை சந்தித்துள்ளார். அதுமட்டும் இன்றி வலைப்பயிற்சியின் போதும் ஆட்டம் பெரிய டச்சில் இல்லாதது போல் இருக்கிறது. அதன் காரணமாக இந்திய அணியின் பயிற்சியாளரான கௌதம் கம்பீரும், ஜெய்ஸ்வாலும் இரண்டு முறை நீண்ட நேரம் உரையாடலிலும் ஈடுபட்டனர். அப்படி கம்பீர் ஜெய்ஸ்வாலுடன் பேசுகையில் எந்தெந்த கருத்துக்களை முன்வைத்தார் என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்தவகையில் இங்கிலாந்தில் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்த்து ஆடும் போது எவ்வித பந்துகளை அடிக்க வேண்டும். எந்தெந்த பந்துகளை விட வேண்டும். மேலும் நல்ல கிரிக்கெட் ஷாட்டினை தவிர மற்ற மோசமான ஷாட்களை எடுத்துரைத்து அதனை தவிக்குமாறு ஜெய்ஸ்வாலிடம் ஆலோசனைகளை கூறியுள்ளார். அதுமட்டும் இன்றி அவரது பேட்டிங் டெக்னிக்கில் உள்ள சிறு சிறு குறைபாடுகளை எடுத்துரைத்த அவர் சூழலுக்கு ஏற்றவாறு ஆடுவதற்கும் ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.
ஏற்கனவே இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு அதிக ரன்களை குவித்த வீரராக திகழ்ந்த அவருக்கு இந்த இங்கிலாந்து தொடர் மிக முக்கியமான தொடர் என்பதால் அவருடன் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் ஏற்கனவே ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற அனுபவ வீரர்கள் இல்லாததால் ஜெய்ஸ்வாலின் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : 10 நாளில் 2 ஃபைனல்களில் தோல்வி.. கைநழுவிய 2வது கோப்பை.. ஸ்ரேயாஸ் இயரை துரத்தும் சோகம்
அதன் காரணமாக அவரது பேட்டிங் பார்ம் மீதான எதிர்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. சீனியர் வீரர்கள் இல்லாமல் இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளதால் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி உங்களது திறமையை வெளிப்படுத்துங்கள் என்றும் வீரர்களிடம் கம்பீர் பேசியது குறிப்பிடத்தக்கது.