- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான்.. வெளியாகவுள்ள அறிவிப்பு – அதுவும் பெரிய ஆஃபரோடு

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் நடைபெற்று வரும் 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருடன் முடிவுக்கு வருகிறது. அதை தொடர்ந்து புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்ற அறிவிப்பும் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

கடந்த 2021-ஆம் ஆண்டு புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற டிராவிட் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய அணியை வழிநடத்தி வந்தார். அதில் 2022-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் அரையிறுதி போட்டி வரையும், 2023-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இறுதி போட்டி வரையும் கொண்டு சென்றார்.

- Advertisement -

ஆனால் இந்த இரண்டு தொடரிலும் இந்திய அணியை கோப்பை அருகில் வரை அவர் கொண்டு சென்றாலும் கோப்பையை வெல்ல முடியாமல் திரும்பினார். இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பையுடன் பதவி விலகுவதாக அவர் அறிவித்து விட்டதால் அவருக்கு பதிலாக புதிய பயிற்சியாளரை நியமிக்க வேண்டிய கட்டாயம் பிசிசிஐ-க்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக ஏற்கனவே தீவிர தேடலில் இறங்கிய பிசிசிஐ தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீரை புதிய பயிற்சியாளராக அறிவிக்க காத்திருக்கிறது. இவ்வார இறுதியில் நிச்சயம் இந்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் கௌதம் கம்பீர் கூறிய நிபந்தனைகளை பிசிசிஐ ஏற்றுக் கொண்டதால் அவருக்கு புதிய சலுகையுடன் பதவியை வழங்க உள்ளது. அதாவது புதிய பயிற்சியாளராக பதவியேற்க இருக்கும் கௌதம் கம்பீர் தனது விருப்பப்படியே பயிற்சியாளர்கள் குழுவை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் அவரது விருப்பப்படியே அவர் விரும்பும் நபர்கள் உதவி பயிற்சியாளர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : விராட், ரோஹித் மாதிரி 4000 ரன்ஸ் அடிச்சுட்டா போதுமா? பாபர் அசாம் டி20யில் விளையாடக்கூடாது.. ஸ்ரீகாந்த் விளாசல்

அதே போன்று சப்போர்ட் ஸ்டாப்புகளும் அவர் அறிவிக்கும் நபர்களே இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு அதிகாரத்துடன் பதவிக்கு வரும் முதல் பயிற்சியாளர் இவர்தான் என்ற தகவலும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -