ராகுல் டிராவிடை விட அதிக சம்பளம்.. அதுமட்டுமின்றி கிடைக்கப்போகும் பல்வேறு சலுகைகள் – கம்பீருக்கு அடித்த அதிர்ஷ்டம்

Gambhir-Salary
- Advertisement -

அண்மையில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐசிசி-யின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் முன்னாள் பயிற்சியாளரான ராகுல் டிராவிடின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியை சிறப்பாக பயிற்றுவித்து வந்த டிராவிட் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க வேண்டும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அவரது இந்த முடிவினை மதித்த பிசிசிஐ-யும் அவரை தொடர்ந்து வற்புறுத்தாமல் புதிய பயிற்சியாளருக்கான தேர்வினை அண்மையில் நடத்தி முடித்தது. இந்த தேர்விற்காக பல்வேறு தரப்பிலும் இருந்தும் விண்ணப்பங்கள் வந்தாலும் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ கம்பீர் மீது நம்பிக்கை வைத்து அவரை புதிய பயிற்சியாளராக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது.

- Advertisement -

இந்நிலையில் புதிய பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ள கம்பீருக்கு கொடுக்கப்பட இருக்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் கடைசியாக பயிற்சியாளர் பதவியில் இருந்த ராகுல் டிராவிடுக்கு ஆண்டுதோறும் இந்திய மதிப்பில் சுமார் 12 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது.

ஆனால் அவருடைய சம்பளத்தை விட கூடுதல் சம்பளம் வேண்டும் என்று கம்பீர் கேட்டிருக்கிறார். அதன் காரணமாகவே அவரது பதவி நியமனம் தாமதம் ஆகியிருந்தது. இந்நிலையில் கம்பீரின் கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ அவருக்கு 12 கோடியை விட அதிகமான சம்பளத்தை நிர்ணயித்துள்ளது.

- Advertisement -

மேலும் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றால் நாள் ஒன்றுக்கு தினப்படியாக 21,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. அதை தவிர்த்து வெளிநாட்டுக்கு சென்றால் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கும் வசதி மற்றும் சலவை செலவுகள், உணவு செலவுகள் என அனைத்திற்குமே ஸ்பெஷல் அலவுன்ஸ் வழங்கப்பட இருக்கிறது.

இதையும் படிங்க : அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணி செல்லுமா? – பி.சி.சி.ஐ சொல்வது என்ன?

இப்படி கம்பீர் கேட்ட சலுகைகளை எல்லாம் பிசிசிஐ வழங்க முன் வந்துள்ளதால் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது என்றே கூறலாம். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட இருக்கும் வேளையில் அவரது தலைமையின் கீழ் இந்திய அணி எவ்வாறு செயல்படப் போகின்றது என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement