தேவையா இது, இலங்கை ரசிகர்களிடம் வாய்விட்டு கடைசியில் சரணடைந்த கம்பீர் – நடந்தது இதோ

Gautam Gambhir Srilanka
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்ற 2022 ஆசிய கோப்பையில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் அசத்திய இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. செப்டம்பர் 11ஆம் தேதியான நேற்று துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 170/6 ரன்கள் எடுத்தது. நிஷாங்கா, சனாக்கா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 58/5 என தடுமாறிய அந்த அணியை மிடில் ஆர்டரில் மிரட்டிய ஹசரங்கா அதிரடியாக 36 (21) ரன்களும் அவருடன் கடைசி வரை அவுட்டாகாமல் சிறப்பாக பேட்டிங் செய்த ராஜபக்சா 71* (45) ரன்களும் குவித்து காப்பாற்றினார்.

அதை தொடர்ந்து 171 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு கேப்டன் பாபர் அசாம் 5, பக்கார் ஜமான் 0 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். அதனால் 22/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணியை 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்ற போராடிய இப்திகார் அகமத் 32 ரன்களும் முஹம்மது ரிஸ்வான் 55 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் அடுத்து வந்த பேட்ஸ்மென்கள் இலங்கையின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி 147 ரன்களுக்கு சுருண்டது. அந்தளவுக்கு தரமாக பந்து வீசிய இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசன் 4 விக்கெட்டுகளும் ஹசரங்கா 3 விக்கெட்டும் எடுத்தனர்.

- Advertisement -

சாதித்த இலங்கை:
அதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை சாம்பியன் பட்டம் வென்று தற்சமயத்தில் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் தங்களது ரசிகர்கள் மற்றும் நாட்டு மக்களின் முகத்தில் புன்னகையை ஏற்படுத்தியது. ஒரு காலத்தில் உலகை மிரட்டிய இலங்கை சமீப காலங்களில் அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாததால் பலவீனமாக மாறி ஐசிசி தரவரிசையில் 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதனாலேயே இந்த தொடரில் அந்த அணி கோப்பையை வெல்லாது என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் முதல் போட்டியில் தோற்றாலும் அதன்பின் கொதித்தெழுந்த அந்த அணி இளம் வீரர்களுடன் முக்கிய போட்டிகளில் அற்புதமாக செயல்பட்டு 6வது முறையாக ஆசிய கோப்பையை வென்று சரித்திரம் படைத்துள்ளது.

அதிலும் டாஸ் தோற்றால் 90% தோல்வி உறுதி என உலகமே அறிந்த துபாயில் டாஸ் தோற்றும் 58/5 என ஆரம்பத்திலேயே தடுமாறியதால் ஏற்பட்ட அழுத்தத்தின் பிடியில் சிக்காமல் சாம்பியன் அணியை போல் விளையாடி வென்ற இலங்கை தற்போது பாராட்டு மழையில் நனைந்து வருகிறது. முன்னதாக இந்த தொடரில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் வழக்கம் போல சர்ச்சையான வர்ணனைகளை செய்து வருகிறார்.

- Advertisement -

தேவையா இது:
குறிப்பாக நேற்று வந்த சூரியகுமார் யாதவ் 3வது இடத்தில் களமிறங்க வேண்டும் என்று தெரிவித்த அவர் சதமடித்து பார்முக்கு திரும்பியதும் டி20 உலக கோப்பையில் விராட் கோலி 3வது இடத்தில் களமிறங்க வேண்டும் என்று யூ டர்ன் போட்ட கருத்துக்களால் ரசிகர்களிடம் கிண்டலுக்கு உள்ளானார். அந்த நிலைமையில் 58/5 என இலங்கை தடுமாறியபோது சமீப காலங்களில் கத்துக்குட்டியாக மாறிப்போன அந்த அணி இந்தியாவுக்கு அடுத்தபடியாக வரலாற்றில் 5 ஆசிய கோப்பைகளை எப்படி வென்றது என தெரியவில்லை என்ற வகையில் நேரடி வர்ணனையில் பேசினார்.

அதை காதில் வாங்கி அமைதியாக இருந்த சில இலங்கை ரசிகர்கள் இறுதியில் தங்களது அணி வென்றதும் களத்திற்கு வந்து இலங்கையை பாராட்டி பேசும் வகையில் வர்ணனை செய்து கொண்டிருந்த கம்பீருக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். அப்படி வாயை விட்டு மாட்டியதால் வசமாக சிக்கிய கௌதம் கம்பீர் வேறு வழியின்றி அவர்களை சமாதானப் படுத்துவதற்காக சரணடைந்ததை போல் இலங்கை கொடியை கையில் பிடித்து வாழ்த்து தெரிவித்தார். அதனால் பழைய கருத்துக்களை மறந்த இலங்கை ரசிகர்கள் அவருடைய அந்த செயலுக்கு கைதட்டி பாராட்டுகளை தெரிவித்தனர்.

அத்துடன் “சூப்பர் டீம், வெற்றிக்கு தகுதியானவர்கள், வாழ்த்துக்கள் இலங்கை” என ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவரை பாராட்டும் இலங்கை ரசிகர்கள் இனியாவது பேசுவதற்கு முன்பாக யோசித்து வார்த்தைகளை விடுமாறும் பதிலளித்துள்ளனர். இதை பார்த்த இந்திய ரசிகர்கள் இப்படி களத்திலேயே உடனுக்குடன் பதிலடி வாங்கும் அளவுக்கு இது போன்ற கருத்துக்களை சொல்வது தேவையா என்று சமூக வலைதளங்களில் கலாய்க்கிறார்கள்.

Advertisement