என்னை பற்றி உரிமையுடன் பேச நீங்க யார்? இந்திய ரசிகர்களுக்காக பேசிய.. டெல்லி ஓனரை விளாசிய கம்பீர்

Gautam Gambhir
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் சொந்த மண்ணில் 25 வருடங்கள் கழித்து தோற்றது. அதற்கு அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்தது. முன்னதாக இந்திய அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார்.

அவருடைய வழிகாட்டுதலில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடி ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக தொடர்ந்து வருகிறது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. குறிப்பாக கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா வரலாறு காணாத ஒயிட்வாஸ் தோல்வியைச் சந்தித்தது.

- Advertisement -

விமர்சிக்க உரிமையில்லை:

அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் 3 – 1 (5) என்ற கணக்கில் தோற்ற இந்தியா 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை விட்டது. அதனால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. அடுத்ததாக விராட், ரோஹித்தை கழற்றி விட்ட இந்திய அணி இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரை வென்றது.

ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா தோற்றது. அதற்கு சோதனை என்ற பெயரில் கௌதம் கம்பீர் செய்யும் மாற்றங்கள், தவறான தேர்வுகள், சுழலுக்கு சாதகமான பிட்ச்கள் முக்கிய காரணமானது. அதனால் இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து கம்பீர் விலக வேண்டும் என இந்திய ரசிகர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

- Advertisement -

கம்பீர் பதிலடி:

அதே போல இந்திய ரசிகர்களின் சார்பாக டெல்லி கேப்பிடல்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளர் பர்த் ஜிண்டால் “இது இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்பெசலிஸ்ட் பயிற்சியாளரை நியமிக்க வேண்டிய நேரம்” என்று கம்பீரை ட்விட்டரில் விமர்சித்தார். இந்நிலையில் அவருக்கு கம்பீர் கொடுத்துள்ள பதிலடி பின்வருமாறு. “கிரிக்கெட்டில் எதுவுமே செய்ய முடியாத சிலர் சில விஷயங்களைச் சொன்னார்கள்”

இதையும் படிங்க: இப்போவும் விராட், ரோஹித்துக்கு 2027 உ.கோ வாய்ப்பு உறுதி கிடையாது.. போட்டிக்கு அவங்க இருக்காங்க.. கம்பீர் பேட்டி

“என்னவெல்லாம் சொல்லப்பட்டது என்பது கடவுளுக்குத் தெரியும். ஒரு ஐபிஎல் அணியின் உரிமையாளரும் பயிற்சியாளர் பதவியைப் பிரிப்பது பற்றி எழுதினார். அது ஆச்சரியமானது. மக்கள் அவர்களுடைய வேலையில் நிற்பது முக்கியம். ஏனெனில் மற்றவர்கள் வேலையில் நாங்கள் செல்வதில்லை. அதனால் அவர்களுக்கும் எங்களுடைய வேலையில் நுழைவதற்கான உரிமை இல்லை” என்று கூறினார்.

Advertisement