- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வெளிய தான் கோபம் ஆனா மொத்த மனசும் தங்கம் – இந்திய வீரரின் அம்மா சிகிச்சைக்கு கம்பீர் மாபெரும் உதவி, பாராட்டும் ரசிகர்கள்

டெல்லியை சேர்ந்த நட்சத்திர முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் 2003 – 2016 வரையிலான காலகட்டங்களில் இந்தியாவுக்காக 3 விதமான கிரிக்கெட்டிலும் விளையாடி 10000+ ரன்களை குவித்து 20 சதங்களை அடித்து நிறைய மறக்க முடியாத வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய பெருமைக்குரியவர். குறிப்பாக 2007 டி20 உலக கோப்பையில் ஃபைனலில் அதிரடியாக விளையாடி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் 2011 உலகக்கோப்பை பைனலிலும் 97 ரன்கள் குவித்து 28 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தோனி தலைமையில் இந்தியா கோப்பையை முத்தமிட கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

அந்த வகையில் உலகக் கோப்பை நாயகனாக ரசிகர்களால் போற்றப்படும் அவர் ஓய்வுக்கு பின் வர்ணனையாளராக செயல்பட்டாலும் தமது கேரியரில் கடைசி காலங்களில் இளம் வீரர்களை வளர்ப்பதற்காக கழற்றி விட்ட தோனியை அவ்வப்போது விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். குறிப்பாக 2011 உலகக் கோப்பையை தோனி மட்டும் வென்று கொடுக்கவில்லை 11 வீரர்கள் சேர்ந்து வென்று கொடுத்தனர் என்று சமயம் கிடைக்கும் போதெல்லாம் பேசி வரும் அவர் அதற்கு அடுத்தபடியாக விராட் கோலியை சிறப்பாக செயல்பட்டாலும் சம்பந்தமின்றி விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

- Advertisement -

மனசு தங்கம்:
அதன் உச்சகட்டமாக 2013இல் கொல்கத்தாவின் கேப்டனாக விராட் கோலியுடன் சண்டை போட்ட அவர் இந்த ஐபிஎல் தொடரில் 10 வருடங்கள் கழித்து பகையை மறக்காமல் லக்னோவின் பயிற்சியாளராக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்படி கௌதம் கம்பீர் என்றாலே சர்ச்சையாக பேசுபவர் சண்டைகளுக்கு அஞ்சாதவர் என்ற கருத்தும் கண்ணோட்டமும் பரவலாக காணப்படுகிறது. இருப்பினும் கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்று சொல்வதைப்போல ஓய்வுக்கு பின் அரசியலில் ஈடுபட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ள அவர் தன்னுடைய தொகுதியில் 1 ரூபாய்க்கு உணவு போன்ற நிறைய திட்டங்களை செய்து மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார்.

குறிப்பாக தினமும் ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு உணவு வழங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நிதி போதவில்லை என்பதாலேயே ஓய்வுக்கு பின் வர்ணனையாளர் மற்றும் பயிற்சியாளராக செயல்பட்டு வருவதாக அவர் கடந்த வருடம் வெளிப்படையாக தெரிவித்தது ரசிகர்களின் நெஞ்சைத் தொட்டது. இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் ராகுல் சர்மா மனைவியின் தாயார் கடந்த மாதம் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது கௌதம் கம்பீர் தான் உதவி செய்து காப்பாற்றியதாக கூறியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக இந்தியாவுக்காக குறைந்த போட்டிகளில் விளையாடி ஐபிஎல் தொடரிலும் சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்டதால் தற்போது பெரிய அளவில் வருமானம் இல்லாமல் தவிக்கும் ராகுல் சர்மா தனது மனைவியின் அம்மாவின் மருத்துவ செலவுக்கான பணம் இல்லாமல் தடுமாறியுள்ளார். அந்த நிலைமையில் கௌதம் கம்பீரின் உதவியாளர் கௌரவ அரோரா அவர்களை தொடர்பு கொண்டு அவர் உதவி கேட்டுள்ளார்.

அதற்கு உடனடியாக உதவி செய்ததால் தன்னுடைய மனைவியின் அம்மா அறுவை சிகிச்சைமேற்கொண்டு இன்று மிகவும் நலமுடன் இருப்பதாக புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் ஷர்மா தக்க சமயத்தில் உதவிய கௌதம் கம்பீர் புகைப்படத்துடன் மனதார நன்றி தெரிவித்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் கௌதம் கம்பீருக்கு தங்களது சார்பில் நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக என்ன தான் வெளியில் பார்ப்பதற்கு சண்டைக்கோழியை போல் விமர்சிப்பதையும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருந்தாலும் சொக்க தங்கத்தை போன்ற மனதை கொண்டிருப்பதாக கம்பீரை ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

இதையும் படிங்க:MI vs RCB : கட்டுக்கடங்காத சூறாவளியாக ஆர்சிபி’யை நொறுக்கிய சூரியகுமார் – சாதனை வெற்றியால் மும்பை டபுள் மாஸ் முன்னேற்றம்

அது மட்டுமல்லாமல் சில ஏழை இளம் வீரர்களுக்கு தேவையான உபகரணங்களையும் வாய்ப்புகளையும் கௌதம் கம்பீர் சமீப காலங்களில் பெற்றுக் கொடுத்துள்ளார். அந்த வகையில் அவருடைய உதவி செய்யும் மனப்பான்மை ரசிகர்களுக்கு தொடர்ந்து ஒரு பக்கம் வியப்பை கொடுத்துக் கொண்டே வருகிறது. இதைத்தொடர்ந்து தற்போது அவர் ஆலோசகராக இருக்கும் லக்னோ 2023 ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்து 3வது இடத்தில் இருப்பதுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -