கேப்டன் பதவி பறிக்கப்பட்டது ஏன்? ரோஹித் சர்மாவுக்கு விளக்கம் கொடுத்த கோச் கம்பீர் – விவரம் இதோ

Rohit and Gambhir
- Advertisement -

தற்போது ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான 2 வகையான இந்திய அணியும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தற்போது ஆஸ்திரேலிய நாட்டிற்கு சென்று அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரோஹித் சர்மாவுக்கு விளக்கம் கொடுத்த கவுதம் கம்பீர் :

இந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை மறுதினம் அக்டோபர் 19-ஆம் தேதி பெர்த் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கேப்டன் பொறுப்பில் இருந்த ரோஹித் சர்மா நீக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கும் வேளையில் அவரது கேப்டன் பதவி பறிக்கப்பட்டது பலரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் அனுபவ வீரரான அவரின் பதவியை பறித்துவிட்டு ஒரு இளம்வீரருக்கு இப்படி பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளது பலரது மத்தியிலும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

2027 ஒருநாள் உலககோப்பை தொடர் வரை இந்திய அணியில் விளையாட ரோஹித் சர்மா விருப்பம் தெரிவித்திருந்தாலும் இந்திய அணியின் நிர்வாகம் அவரை ஒதுக்கிவிடும் என்றே தெரிகிறது. அதன் முதற்கட்டமாகவே இந்த கேப்டன் பதவி பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டது ஏன்? என்பது குறித்த தெளிவான விளக்கத்தை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவரிடம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில் வெளியான தகவலில் : இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற அனுபவ வீரர்களின் பங்கு என்பது மிகப்பெரியது.

இதையும் படிங்க : ரோஹித் சர்மா உடல் எடையை குறைக்க காரணமே அந்த ஏர்போர்ட் சம்பவம் தான் – அபிஷேக் நாயர் பகிர்வு

எனவே இனிவரும் தொடர்களில் அவர்கள் எந்தவொரு சுமையும் இன்றி சுதந்திரமாக விளையாட வேண்டும் என்பதற்காகவும், இளம் வீரர்களுடான் தங்களது அனுபத்தை பகிர்ந்து கொண்டு அவர்களை முன்னேற்றவுமே இனி அவர்கள் இந்திய அணியுடன் இருக்க வேண்டும் என்றும் கம்பீர் தெளிவான விளக்கத்தை கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement