ரோஹித் சர்மா உடல் எடையை குறைக்க காரணமே அந்த ஏர்போர்ட் சம்பவம் தான் – அபிஷேக் நாயர் பகிர்வு

Rohit and Abhishek
- Advertisement -

இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற்ற 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடியிருந்த ரோகித் சர்மா கேப்டனாக இந்திய கிரிக்கெட் அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தி கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார். அவரது தலைமையின் கீழ் இந்திய அணி கடந்த ஓராண்டுக்குள் இரண்டு ஐசிசி சாம்பியன் பட்டங்களை வென்றது ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதோடு தனிப்பட்ட முறையில் ரோகித் சர்மாவும் மிகச்சிறப்பான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி இருந்தார்.

ரோஹித் உடல் எடையை குறைக்க இதுவே காரணம் : அபிஷேக் நாயர்

ஆனாலும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்த பின்னர் ஐபிஎல் தொடருக்கு அடுத்ததாக அவர் கூடுதல் உடல் எடையுடன் இருந்தது பலரது மத்தியிலும் விமர்சிக்கப்பட்டது. எப்பொழுதுமே ரோகித் சர்மா கூடுதல் உடல் எடையுடன் இருக்கும் போது விமர்சிக்கப்படுவது சகஜமான ஒன்றுதான்.

- Advertisement -

இந்நிலையில் இப்படி அவரது உடல் எடை குறித்த விமர்சனம் வந்ததுமே தற்போது ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னதாக பல கிலோ எடை குறைத்துள்ள ரோகித் சர்மா தற்போது முன்பை விட மிக பிட்டாக காணப்படுகிறார். இந்நிலையில் இப்படி ரோகித் சர்மா உடல் எடையை குறைத்து பிட்டாக மாறியதற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அந்தவகையில் முன்னாள் இந்திய அணியின் துணை பயிற்சியாளரான அபிஷேக் நாயர் வெளிப்படையாக பேசியுள்ள சில கருத்துகளில் அதன் காரணம் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக ரோகித் சர்மாவிற்கு 12 வாரங்கள் ஓய்வு இருந்தது. அதில் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நானும் அவரும் முடிவு எடுத்தோம்.

- Advertisement -

அந்த நேரத்தில் தான் பழைய விஷயங்களை பராமரிக்கக் கூடாது என்றும் மேல் நோக்கி வளர்ந்து போக வேண்டும் என்றும் விரும்பினோம். ரோகித் சர்மா வேகமாக இருப்பதற்கு பிட்டாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால் கிடைத்த இந்த நேரத்தில் தேவையான அளவு உடல் எடையை குறித்து ஃபிட்டாக மாறியுள்ளார்.

இதையும் படிங்க : ரபேல் நடால் மாதிரி.. இந்திய ஜாம்பவான்கள் விராட், ரோஹித்தை பிசிசிஐ கெளரவிக்கனும்.. மதன் லால்

மேலும் ஒருமுறை அவர் விமான நிலையத்திற்கு சென்ற போது அவரது கூடுதல் எடையுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அவரது உடல் எடை குறித்து நிறைய கேலி கிண்டல்கள் வெளிவந்தன. அதுவே அவரிடம் தாக்கத்தை ஏற்படுத்தி தற்போது அவர் உடல் எடையை குறைக்க காரணமாகவும் மாறியிருந்ததாக அபிஷேக் நாயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement