கவலைப்படாதீங்க அபிமன்யு.. வாய்ப்பு மட்டுமல்ல இந்திய அணியில் இதுவும் உங்களுக்கு கிடைக்கும் – கம்பீர் வாக்குறுதி

Gambhir and Abhimanyu
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்திருந்த அபிமன்யு ஈஸ்வரனுக்கு 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நிச்சயம் அறிமுகமாகவும் வாய்ப்பு கிடைக்கும் என்று இங்கிலாந்து தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக பேசப்பட்டது. ஆனால் நடைபெற்று முடிந்த இந்த தொடரின் ஒரு போட்டியில் கூட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவரை தவிர்த்து சில வீரர்களுக்கு இந்த தொடரில் அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது.

அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாக்குறுதியளித்த கம்பீர் :

இப்படி உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி நீண்ட காலமாக தனது வாய்ப்புக்காக காத்திருக்கும் ஒரு தரமான வீரரை தவிர்த்து மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது சமூக வலைதளத்தில் பெரியளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் பெறுவதற்காக மட்டுமே இத்தனை ஆண்டு காலம் உழைத்து வரும் ஒரு வீரரின் வாய்ப்பை நிராகரித்து வருவது தவறு என்றும் பலரும் பேசி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் விரைவில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு அபிமன்யு ஈஸ்வரனுக்கு வழங்கப்படும் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவருடன் பேசியது குறித்து சில தகவல்கள் தற்போது வெளியாக்கியுள்ளன. அந்த வகையில் வெளியான தகவலில் குறிப்பிடப்பட்டதாவது :

நீ சரியான பாதையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறாய். இதேபோன்று தொடர்ந்து உனது உழைப்பை மட்டும் கொடு. நிச்சயம் உனக்கான வாய்ப்பு விரைவில் கிடைக்கும். அதுமட்டும் இன்றி உங்களுக்கு அப்படி கிடைக்கும் வாய்ப்பு நீண்டகால வாய்ப்பாக இருக்கும். ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் நீங்கள் சோபிக்கவில்லை என்பதற்காக நிச்சயம் உங்களை அணியில் இருந்து நீக்க மாட்டேன் என்று கௌதம் கம்பீர் அபிமன்யு ஈஸ்வரனிடம் உறுதியளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்திய அணியின் பயிற்சியாளரான கௌதம் கம்பீர் அளித்துள்ள இந்த வாக்குறுதி அபிமன்யு ஈஸ்வரனுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளதாகவும் அதன் காரணமாக அவர் எதிர்வரும் துலீப் டிராபி தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியுடன் தொடர்ந்து பயணித்து வரும் அவருக்கு ஏதாவது ஒரு போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க : கேஎல் ராகுல் கேரியரிலேயே இதான் பெஸ்ட்.. அவரோட சேர்ந்து நிகழாததை நிகழ்த்திருக்காரு.. சச்சின் பாராட்டு

ஆனால் இதுவரை அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறது. அதுதவிர்த்து அவர் இந்திய அணியுடன் பயணிக்க ஆரம்பித்ததில் இருந்து அவருக்கு பின்னர் வந்த 15 வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் அறிமுக வாய்ப்பை பெற்ற வேளையில் இதுவரை அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு கிடைக்காதது நிச்சயம் அவருக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கும்.

Advertisement