கேஎல் ராகுல் கேரியரிலேயே இதான் பெஸ்ட்.. அவரோட சேர்ந்து நிகழாததை நிகழ்த்திருக்காரு.. சச்சின் பாராட்டு

Sachin Tendulkar KL Rahul
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆரம்பம் முதலே பரபரப்பாக நடைபெற்ற அத்தொடரை 2 – 2 என்ற கணக்கில் தலைமையிலான இளம் இந்திய அணி சமன் செய்தது. குறிப்பாக கடைசிப் போட்டியில் வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மிராக்கள் வெற்றி பெற்று அனைவரையும் பாராட்ட வைத்தது.

அந்த வெற்றிக்கு முகமது சிராஜ் முதல் வாஷிங்டன் சுந்தர் வரை அனைவருமே முக்கிய பங்காற்றினார்கள். பேட்டிங் துறையில் கேப்டன் சுப்மன் கில் 754 ரன்களை அடித்து பல சாதனைகளை புரிந்தாலும் கேஎல் ராகுலின் செயல்பாடுகள் அற்புதமானதாக இருந்தது. ஏனெனில் விராட், ரோஹித் ஓய்வு பெற்றதால் சீனியர் பேட்ஸ்மேனான ராகுல் இங்கிலாந்தில் பொறுப்புடன் விளையாட வேண்டிய சூழல் உருவானது.

- Advertisement -

பொறுப்பான ராகுல்:

அந்த சூழ்நிலையில் மிகவும் பொறுப்புடன் விளையாடிய ராகுல் 2 அரை சதங்கள் 2 சதங்கள் உட்பட 532 ரன்கள் குவித்து அசத்தினார். இந்நிலையில் 2014 முதல் விளையாடும் கேஎல் ராகுல் டெஸ்ட் கேரியரில் இதுவே மிகச்சிறந்த செயல்பாடு என்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். மேலும் இங்கிலாந்து போன்ற வெளிநாட்டில் இந்தியாவின் 2 ஓப்பனிங் பேட்ஸ்மேன்களும் நீண்ட காலமாக 500 ரன்கள் அடிக்கவில்லை என்று சச்சின் கூறியுள்ளார்.

ஆனால் இம்முறை இந்திய அணிக்கு மிகச்சிறந்த துவக்கத்தைக் கொடுத்த ராகுல் – ஜெய்ஸ்வால் தலா 500 ரன்கள் அடித்ததாக சச்சின் பாராட்டியுள்ளார். இது பற்றி ரெடிட் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நம்முடைய ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் விளையாடிய விதம் சிறப்பானது. அவர்கள் தொடர் முழுவதுமே திடமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்”

- Advertisement -

சச்சின் பாராட்டு:

“ராகுல் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்தார். ஜெய்ஸ்வால் கிட்டத்தட்ட 500க்கும் நெருக்கமான ரன்கள் குவித்தார். அது நம்முடைய அணியில் நீண்ட காலமாக நடைபெறவில்லை. அவர்கள் அமைத்த அடித்தளம் முக்கியமானது. அதனாலேயே நம்மால் வெற்றிகரமாக செயல்பட முடிந்தது. ராகுல் சூப்பராக பேட்டிங் செய்ததாக எனக்குத் தோன்றியது. இது அவர் பேட்டிங் செய்து நான் பார்த்ததிலேயே சிறந்தது”

இதையும் படிங்க: அது ஜஸ்ப்ரித் பும்ராவின் தப்பில்ல.. அந்த பெயரை மறந்து உலக சாம்பியனை விமர்சிக்காதீங்க.. டிகே பதிலடி

“அவருடைய தடுப்பாட்டம் உடலுக்கு நெருக்கமாக இருந்தது, பந்தை கச்சிதமாக அடிக்காமல் விட்ட அவர் தன்னை நிர்வகித்து கட்டுப்பாட்டுடன் விளையாடினார். அதனால் பவுலர்கள் விரக்தியடைந்ததை நான் பார்த்தேன். ஏனெனில் ராகுல் பெரும்பாலான பந்துகளை அடிக்கவில்லை. அதனால் அவருக்கு எதிராக எங்கே பவுலிங் செய்வது என்று பவுலர்கள் ஆச்சரியமடைந்தனர். பந்து அடிக்கக்கூடிய இடத்தில் இருந்த போது அற்புதமான ஷாட்டுகளை அடித்த அவருடைய பேட்டிங்கை நான் மகிழ்ச்சியாக பார்த்தேன். அவருடைய ஃபுட்வொர்க் துல்லியமானதாகவும் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் இருந்தது” என்று கூறினார்.

Advertisement