- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதான் டெம்ப்ளேட்.. ஆஸி டி20 தொடரில் சூர்யகுமாரின் மோசமான ஃபார்ம் பற்றி கவலையில்ல.. கம்பீர் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் கடைசிப் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா ஆறுதல் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 121*, விராட் கோலி 74* ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தனர்.

அதனால் 2027 உலகக் கோப்பைக்கு முன் தங்களைக் கழற்றி விட நினைக்கும் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழுவுக்கு அவர்கள் தக்க பதிலடி கொடுத்தார்கள். அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அத்தொடருக்கு முன்பாக கேப்டன் சூரியகுமார் யாதவ் மோசமான ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சூரியகுமாரின் ஃபார்ம்:

அவருடைய தலைமையில் அணியாக சிறப்பாக செயல்பட்டு வரும் இந்தியா 2025 ஆசியக் கோப்பையை வென்று அசத்தியது. ஆனால் கேப்டனாக பொறுப்பேற்றது முதல் சூரியகுமார் யாதவ் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் அடிக்கத் தடுமாறி வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடருக்கு முன் சூரியகுமார் ஃபார்ம் பற்றி தமக்கு கவலையில்லை என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடும் அணுகு முறையை பின்பற்றுவதாக என்று கம்பீர் கூறியுள்ளார். இது பற்றி ஜியோஹாட்ஸ்டார் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “நேர்மையாக சூரியகுமார் பேட்டிங் ஃபார்ம் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனெனில் நாங்கள் எங்களுடைய அணியில் அதீத ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாடும் டெம்ப்ளேட்டை பின்பற்றுகிறோம்”

- Advertisement -

கம்பீர் கருத்து:

“இந்த தத்துவத்தை நீங்கள் பின்பற்றும் போது தோல்வி தவிர்க்க முடியாதது. சூரியகுமார் 30 – 40 ரன்கள் அடித்து விமர்சனங்களை தவிர்ப்பது எளிது. ஆனால் ஆக்ரோஷமான அணுகுமுறையை பின்பற்றும் போது வரும் தோல்விகளை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் அனைவரும் முடிவெடுத்துள்ளோம். ஆசியக் கோப்பை முதல் அபிஷேக் சர்மா நல்ல ஃபார்மில் இருக்கிறார்”

இதையும் படிங்க: டி20 தொடரை கைப்பற்றப்போவது யார்? இந்தியா ஆஸ்திரேலியா தொடர் குறித்து – ஜாஹீர் கான் கணிப்பு

“அதே போல சூரியகுமார் ஃபார்மை கண்டறியும் போது பொறுப்புடன் செயல்படுவார். டி20 கிரிக்கெட்டில் நாங்கள் தனிப்பட்டவர்களின் ரன்களை காட்டிலும் விளையாட விரும்பும் கிரிக்கெட்டின் பிராண்ட் மீது கவனம் செலுத்துகிறோம். எங்களுடைய அணுகு முறையில் சில பேட்ஸ்மேன்கள் தடுமாறலாம். ஆனால் எங்களுடைய தாக்கம் ரன்களை விட பெரிதாக இருக்கும்” என்று கூறினார்.

- Advertisement -