அவங்களோட மோதுனா சும்மா விடமாட்டேன்.. ஐபிஎல் 2023 தொடரில் விராட் கோலியுடன்.. சண்டையிட்ட காரணத்தை பகிர்ந்த கம்பீர்

Gautam Gambhir 22
- Advertisement -

நட்சத்திரம் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் சர்வதேச அரங்கில் இந்தியா 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 உலகக் கோப்பை போன்ற சரித்திர வெற்றிகளை பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய பெருமைக்குரியவர். ஆனால் ஓய்வுக்குப் பின் வர்ணையாளராக செயல்பட்டு வரும் அவர் தோனி, விராட் கோலி போன்ற சக வீரர்களை நேரடியாக விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதை விட நடைபெற்று முடிந்த 2023 ஐபிஎல் தொடரின் ஒரு போட்டியிப் பெங்களூரு அணிக்காக விளையாடும் நட்சத்திரம் விராட் கோலியிடம் மற்றும் நவீன்-உல்-ஹக் ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது லக்னோ அணியின் பயிற்சியாளராக இருந்து சண்டையை விலக்க வேண்டிய அவர் அதை செய்யாமல் விராட் கோலியுடன் நெஞ்சோடு நெஞ்சாக மோதும் அளவுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரிய சர்ச்சையாக மாறியது.

- Advertisement -

சும்மா விடமாட்டேன்:
குறிப்பாக 2012 ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் கேப்டனாக விராட் கோலியிடம் சண்டையில் ஈடுபட்ட அவர் 10 வருடங்கள் கழித்து பகையை கொஞ்சமும் மறக்காமல் பயிற்சியாளராக வாக்குவாதத்தில் ஈடுபட்டது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் தலைநகர் டெல்லியில் ஒரே மாநிலத்தில் பிறந்து நாட்டுக்காக ஒன்றாக விளையாடியும் விராட் கோலி பற்றி விமர்சிப்பதையும் சண்டையிடுவதையும் கம்பீர் வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் தமது தலைமையில் விளையாடும் வீரர்களை சீண்டும் எதிரணி வீரர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சும்மா விட மாட்டேன் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். அதனாலேயே விராட் கோலியுடன் சண்டை போட்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஒரு ஆலோசகராக யாரும் என்னுடைய வீரர்கள் மீது நடக்க முடியாது. பொதுவாகவே நான் வித்தியாசமான நம்பிக்கையை கொண்டுள்ளேன்”

- Advertisement -

“அதாவது போட்டி முடியும் வரை நான் யாரிடமும் மோதுவதற்கான உரிமையை கொண்டிருக்கவில்லை. ஆனால் போட்டி முடிந்த பின்பும் யாராவது என்னுடைய வீரர்களிடம் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டால் அவர்களை பாதுகாக்க வேண்டிய உரிமையும் கடமையும் எனக்கு உள்ளது” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடிய லெஜெண்ட்ஸ் லீக் 2023 தொடரில் ஸ்ரீசாந்துடன் சில தினங்களுக்கு முன்பாக கௌதம் கம்பீர் சண்டையில் ஈடுபட்டார்.

இதையும் படிங்க: காதலி ஏமாத்திட்டு போனா எப்படி இருக்கும்.. நானும் அதை பாத்துருக்கேன்.. 2023 உ.கோ தோல்வி பற்றி டு பிளேஸிஸ்

அப்போது தம்மை ஃபிக்ஸர் என்று சொல்லியதுடன் சொல்லக்கூடாத சில கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியதாக ஸ்ரீசாந்த் போட்டியின் முடிவில் தெரிவித்தது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது. மேலும் கௌதம் கம்பீர் மிகவும் திமிர் பிடித்த வர்க்கமற்ற நபர் என்றும் ஸ்ரீசாந்த் தெரிவித்தது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement