இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜூலை நான்காம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ்ந்தது. அந்த வகையில் கடந்த மூன்று போட்டிகளாக சொதப்பி வந்த சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக 15 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமாகி வரலாற்று சாதனையும் நிகழ்த்தியிருந்தார்.
சஞ்சு சாம்சனுக்கு ஆறுதல் கூறிய கவுதம் கம்பீர் :
ஒருபுறம் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமானது பலரது மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் மறுபுறம் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டது ஏமாற்றத்தை அளித்தது. தனிப்பட்ட முறையிலும் இந்த நீக்கம் சஞ்சு சாம்சனை கடுமையாக பாதித்திருக்கும். ஏனெனில் சஞ்சு சாம்சன் தனது கரியர் முழுக்கவே இதுபோன்று அடிக்கடி இந்திய அணியின் நிர்வாகத்தால் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.
2026 டி20 உலகக் கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதினை வென்ற அவர் தற்போது மூன்று போட்டிகள் சரியாக விளையாடவில்லை என்ற காரணத்திற்காக நீக்கப்பட்டுள்ளது பலரையும் அதிருப்தி அடைய வைத்துள்ளது. ஆனால் நிச்சயம் இதிலிருந்து பலமான கம்பேக் கொடுப்பார் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.
இவ்வேளையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்ட பிறகு பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவரை சமாதானப்படுத்தியுள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் இரண்டாவது போட்டிக்கு முன்னதாக மைதானத்தில் சஞ்சு சாம்சனின் கையை பிடித்து நீண்ட நேரம் கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.
இதையும் படிங்க : 10 ஆவது இந்திய வீரராக சர்வதேச டி20 போட்டிகளில் திலக் வர்மா நிகழ்த்திய – அசத்தல் சாதனை
அதில் நீங்கள் அணியிலிருந்து புறக்கணிக்கப்படவில்லை என்றும் மனரீதியாக நீங்கள் தயாராகும் வகையில் இந்த ஓய்வு இருக்கிறது என்றும் நிச்சயம் உங்களுக்கு தொடர் வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கம்பீர் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இதுபோன்று பலமுறை சரிவை சந்தித்த சஞ்சு சாம்சன் மீண்டும் திரும்பி வந்துள்ளார். அதேபோன்று இம்முறையும் நிச்சயம் பலமாக திரும்புவார் என்பது உறுதி.



