இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் விளையாடியிருந்த இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்து இந்த தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி :
10 ஆவது இந்திய வீரராக திலக் வர்மா நிகழ்த்திய சாதனை :
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் குவித்தது. பின்னர் 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 19 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக விளையாடிய நட்சத்திர வீரர் திலக் வர்மா பின்வரிசையில் களமிறங்கி 11 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 24 ரன்கள் குவித்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவர் இந்த போட்டியில் அடித்த 24 ரன்களின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் பத்தாவது இந்திய வீரராக ஒரு முக்கிய சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார்.
அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக கடந்த 2023-ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான திலக் வர்மா இதுவரை 53 போட்டிகளில் விளையாடி 2 சதம் மற்றும் 7 அரைசதம் என 1501 ரன்களை குவித்துள்ளார்.
இதையும் படிங்க : இந்திய அணிக்காக அறிமுகமான பின்னர் வைபவ் சூர்யவன்ஷி வெளியிட்ட – உருக்கமான பதிவு
ஏற்கனவே இந்திய அணி சார்பாக ஒன்பது வீரர்கள் 1500 ரன்களுக்கு மேல் அடித்துள்ள வேளையில் பத்தாவது வீரராக நேற்று திலக் வர்மா 1500 ரன்களை கடந்து இந்த சாதனை பட்டியலில் இணைந்தார். ஒட்டுமொத்தமாக இந்திய வீரர்களில் டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரராக ரோஹித் சர்மா 4231 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



