- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடப்போகும் வீரர் – கன்பார்ம் செய்த கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்ட வேளையில் நேற்று முதன்மை இந்திய அணியானது இங்கிலாந்து புறப்பட்ட சென்றது.

மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் நட்சத்திர வீரர் :

இந்த பயணத்திற்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் ஒன்றிணைந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். அதில் இந்திய அணி எதிர்கொள்ள இருக்கும் இந்த இங்கிலாந்து தொடருக்கான திட்டங்கள் குறித்து பல்வேறு விளக்கங்களை அவர்கள் அளித்திருந்தனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய டெஸ்ட் அணியில் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளதால் மீண்டும் கருண் நாயர் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் அணிக்கு திரும்ப இருப்பது உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே கடந்த ரஞ்சி தொடரில் 4 சதங்களுடன் 863 ரன்களை குவித்திருந்த அவர் விஜய் ஹசாரே தொடரிலும் 5 சதங்களுடன் 779 ரன்கள் குவித்திருந்தார். டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவருக்கு இந்திய ஏ அணியிலும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இரட்டை சதம் அடித்த அவர் நிச்சயம் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இடம்பெறுவார் என்றே தெரிகிறது.

- Advertisement -

அந்த வகையில் கௌதம் கம்பீர் கூறுகையில் : உண்மையிலேயே டொமஸ்டிக் கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஏனெனில் உள்ளூர் போட்டிகளில் அவர்களுக்கு கிடைக்கும் அனுபவத்தை சர்வதேச கிரிக்கெட்டில் கொண்டுவர முடியும். அந்த வகையில் கருண் நாயர் தற்போது நல்ல பாம்பில் இருக்கிறார்.

இதையும் படிங்க : இங்கிலாந்தில் பும்ரா 5 போட்டியிலும் விளையாட மாட்டாரு.. அவங்கள வெச்சு ஜெய்ப்போம்.. கம்பீர், கில் அறிவிப்பு

இந்திய ஏ அணியிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் அவருக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்கும். அதேபோன்று ஒன்றிரண்டு போட்டிகளை வைத்து அவர்களது திறனை எடைபோட மாட்டோம் என்றும் நீண்ட வாய்ப்பையும் அவருக்கு வழங்குவோம் என கவுதம் கம்பீர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -