இங்கிலாந்தில் பும்ரா 5 போட்டியிலும் விளையாட மாட்டாரு.. அவங்கள வெச்சு ஜெய்ப்போம்.. கம்பீர், கில் அறிவிப்பு

Jasprit Bumrah
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்குகிறது. சமீபத்தில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றனர். அதைத் தொடர்ந்து சுப்மன் கில் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இங்கிலாந்தில் களமிறங்க உள்ளது.

வழக்கம் போல இந்தத் தொடரில் இந்தியா வெற்றி பெறுவதற்கு நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா சிறப்பாக செயல்படுவது அவசியமாகிறது. இருப்பினும் கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மற்ற பவுலர்கள் தடுமாற்றமாக பவுலிங் செய்தனர். அதனால் முழுமூச்சுடன் பவுலிங் செய்த பும்ரா 5 போட்டிகளிலும் தனி ஒருவனாக போராடி ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டார்.

- Advertisement -

கெளதம் கம்பீர் அறிவிப்பு:

அதே காரணத்தால் கடைசிப் போட்டியில் முதுகில் காயத்தை சந்தித்த அவர் ஒரு வழியாக குணமடைந்து தற்போது மீண்டும் விளையாடத் துவங்கியுள்ளார். அதன் காரணமாக இங்கிலாந்து மண்ணில் பும்ரா 5 போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அறிவித்துள்ளார். மேலும் ஜஸ்ப்ரித் பும்ரா எந்த 3 போட்டிகளில் விளையாடப் போகிறார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எந்த 3 போட்டியில் அவர் விளையாடப்போகிறார் என்ற முடிவை இன்னும் நாங்கள் எடுக்கவில்லை. இது பற்றி அவருடன் நாங்கள் பேசப்போகிறோம். தொடரின் நிலைமை மற்றும் அது எப்படி செல்கிறது என்பதைப் பொருத்து நாங்கள் அதை முடிவு செய்வோம். ஜஸ்ப்ரித் பும்ரா இது பற்றி நன்றாக தெரிந்து வைத்துள்ளது முக்கியமான அம்சமாகும்” என்று கூறினார்.

- Advertisement -

சமாளிச்சு ஜெய்ப்போம்:

அதே பேட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா முழுமையாக விளையாடாத நிலையை பிரசித் கிருஷ்ணா, சிராஜ் போன்ற மற்ற பவுலர்களை வைத்து சமாளித்து வெல்வோம் என்று கேப்டன் கில் தெரிவித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எந்த சூழ்நிலையில் இருந்தும் டெஸ்ட் போட்டியை வென்று கொடுப்பதற்கு தேவையான வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்டரியை நாங்கள் போதுமான அளவு தேர்வு செய்துள்ளோம்”

இதையும் படிங்க: ஃபைனலில் உதயமாகும் சச்சின் – ஆண்டர்சன் கோப்பை.. இந்தியா – இங்கிலாந்து புதிய கோப்பை அறிமுகம்

“அதே சமயம் ஜஸ்ப்ரித் பும்ரா போன்றவர் மிகவும் முக்கியமானவர். எங்களுக்காக அவர் மீண்டும் வந்து குறிப்பிட்ட அளவு போட்டிகள் விளையாடுவார் என்பது சிறந்த விஷயம். ஆனால் அவரையும் தாண்டி எங்களுடைய அணிக்காக வேலையை செய்து முடிப்பதற்கு தேவையான சிறந்த பவுலர்கள் எங்களிடம் கலவையாக உள்ளனர்” என்று கூறினார்.

Advertisement