டி20 கிரிக்கெட்டில் ரோஹித் – ராகுலுக்கு பதில் அவங்க தான் நிரந்தர ஓப்பனர்கள், 2 இளம் வீரர்களை ஆதரித்த கம்பீர்

Gautam Gambhir Rohit Sharma KL Rahul
- Advertisement -

விராட் கோலிக்கு பின் புதிய முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் கடந்த 2022ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் சாதாரண இருதரப்பு தொடர்களில் மிரட்டலாக செயல்பட்ட இந்தியா ஐசிசி தரவரிசையில் 2016க்குப்பின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக முன்னேறி சாதனை படைத்தது. ஆனால் 6 அணிகள் பங்கேற்ற அழுத்தமான ஆசிய கோப்பையிலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் வழக்கம் போல நாக் அவுட் சுற்றில் சொதப்பிய இந்தியா மீண்டும் வெறுங்கையுடன் வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அந்தத் தொடர்களில் விராட் கோலி, சூரியகுமார் ஆகிய ஒரு சிலரை தவிர்த்து பேட்டிங் துறையில் பெரும்பாலானவர்கள் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Rahul

- Advertisement -

குறிப்பாக பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் கேப்டன் – துணை கேப்டன் என்ற பொறுப்பில்லாமல் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் பெரும்பாலான போட்டிகளில் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் கடுப்பான ரசிகர்களைப் போலவே அதிருப்தியடைந்துள்ள பிசிசிஐ டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா போன்ற காலம் கடந்த வீரர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து 2024 டி20 உலக கோப்பைக்கு முன் புதிய அணியை உருவாக்கும் வேலைகளை துவங்கியுள்ளது.

புதிய ஓப்பனர்கள்:
அதில் நடைபெற்று முடிந்த இலங்கை தொடரில் இஷான் கிசான் – சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக வாய்ப்பு பெற்றனர். அதில் இஷான் கிசான் அவ்வப்போது தடுமாறினாலும் பெரும்பாலான சமயங்களில் வங்கதேசத்துக்கு எதிராக இரட்டை சதமடித்தது போல அதிரடியாக விளையாடும் பண்பை இயற்கையாகவே கொண்டுள்ளார். மறுபுறம் சுப்மன் கில் தொடர்ச்சியாக ரன்களை எடுத்தாலும் ராகுல் போலவே அதை அதிரடியாகவும் விரைவான ஸ்ட்ரைக் ரேட்டிலும் எடுக்க தடுமாறி வருகிறார்.

Shaw

எனவே அவருக்கு பதில் அடுத்ததாக நடைபெறும் நியூசிலாந்து டி20 தொடரில் உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக உழைத்து மீண்டும் தேர்வாகியுள்ள பிரத்வி ஷா வாய்ப்பு பெற வேண்டுமென்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார். அந்த இருவருமே வலது – இடது கை ஜோடியாக ஓப்பனிங் இடத்தில் எதிரணிக்கு சவாலை கொடுப்பார்கள் என்று தெரிவிக்கும் அவர் தற்போதைக்கு சுப்மன் கில் ஒருநாள் மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக 2024 டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு இஷான் கிசான் – பிரிதிவி ஷா ஆகியோர் ராகுல் – ரோஹித் ஆகியோருக்கு பதிலாக நிரந்தர தொடக்க வீரர்களாக விளையாட வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

Gambhir

“பிரிதிவி ஷா இந்திய அணியிலிருந்து வெளியேறயிருக்கக் கூடாது. ஏனெனில் அவர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தியாவுக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார். இப்போதும் அந்த இடத்திற்கு அவர் தான் சரியான வீரர். அவருடன் இசான் கிசான் மற்றும் சூரியகுமார் ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் அதிரடி அணுகு முறையில் விளையாட நினைக்கும் இந்தியா அணிக்கு மிகவும் பொருத்தமானவர்கள். குறிப்பாக தற்போது பிரிதிவி ஷா’வை தேர்வு செய்துள்ள நீங்கள் தொடர்ந்து நம்பி வாய்ப்பு கொடுக்க வேண்டும்”

“அவரை ஒவ்வொரு தொடரையும் வைத்து மதிப்பிட வேண்டாம். அவர் இளமையான அதிரடியாக விளையாடக்கூடிய மேட்ச் வின்னர். எனவே அவரை விளையாடும் 11 பேர் அணியில் தேர்வு செய்து நீண்ட நாட்கள் வாய்ப்பு கொடுங்கள் நிச்சயமாக அசத்துவார். மறுபுறம் சுப்மன் கில் தற்சமயத்தில் டி20 கிரிக்கெட்டை விட டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் டி20 கிரிக்கெட்டில் இஷான் கிசான் – பிரிதிவி ஷா ஆகியோர் நிரந்தர தொடக்க வீரர்களாக விளையாட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

Advertisement