- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பேட்டிங் மட்டும் பண்ணா பத்தாது.. இதையும் சேத்து பண்ணுங்க.. பேட்ஸ்மேன்களுக்கு கண்டிஷன் போட்ட – கவுதம் கம்பீர்

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்குகிறது. இந்த போட்டிக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே சென்னை வந்தடைந்து தற்போது தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அனைத்து வீரர்களையும் தனிப்பட்ட முறையில் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பயிற்சியில் கவனம் செலுத்தும் கம்பீர் :

அந்த வகையில் இந்த ஒருவார பயிற்சி காலத்தில் பேட்ஸ்மேன்களுக்கு புதிய பயிற்சியையும் மேற்கொள்ளும்படி கம்பீர் கூறியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் என்பதனால் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரண்டு அணிகளிலும் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதினால் இந்த போட்டி சுவாரஸ்யமாக நடைபெறவும் வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

முன்பெல்லாம் இந்திய அணியில் சச்சின், சேவாக், யுவராஜ் சிங், ரெய்னா போன்ற வீரர்கள் அவ்வப்போது சுழற்பந்துவீச்சில் பந்துவீசி கைகொடுப்பார்கள். ஆனால் தற்போதைய இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் யாரும் பந்து வீசுவது கிடையாது. ஆனால் புதிய பயிற்சியாளரான கம்பீர் தலைமை பொறுப்பை ஏற்றதிலிருந்து பேட்ஸ்மேன்களும் பந்து வீசவேண்டும் என்று அவர்களுக்கு தனியாக பயிற்சி அளித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருக்கும் டாப் ஆர்டர் வீரர்கள் சிலரும் சுழற்பந்து வீசி பயிற்சி எடுக்க வேண்டும் என்றும் போட்டியின் போது சில ஓவர்கள் வீச வேண்டும் என்றும் கம்பீர் உத்தமிட்டுள்ளாராம்.

- Advertisement -

இதன் காரணமாக இனி பேட்ஸ்மேன்கள் அனைவரும் பேட்டிங் பயிற்சியை மட்டும் மேற்கொள்ளாமல் பகுதி நேரத்தில் பந்துவீசும் பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும் என்று கௌதம் கம்பீர் தனித்தனியாக ஆலோசனையையும் பயிற்சியையும் வழங்கி வருகிறாராம். இதன் காரணமாக தற்போது ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் பேட்டிங் பயிற்சி மட்டும் இன்றி பந்துவீச்சு பயிற்சியையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 36க்கு ஆல் அவுட்டானப்போ இந்திய வீரர்களை பூஸ்ட்டாக்க.. ரவி சாஸ்திரி கரோக்கே பண்ணாரு.. அஸ்வின் பேட்டி

ஏற்கனவே இந்திய அணியில் அக்சர்பட்டேல், ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கும் வேளையில் இன்னும் சிலர் சுழற்பந்து வீசினால் அது போட்டியின் போது கை கொடுக்கும் என்பதாலேயே கம்பீர் எந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -