கிரிக்கெட் உலகின் “தாதா” என்கிற பட்டப்பெயரை பெற்றவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி. இடதுகை ஆட்டக்காரரான கங்குலி இளம்வயதில் மைதானத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தால் சிக்ஸர் மழை பொழியும்.சச்சின்,கங்குலி இருவரும் ஒரேகாலத்தில் இந்திய அணிக்கு கிடைத்த வைரங்கள் என்றால் மிகையாகாது.
கொல்கத்தாவின் இளவரசர் மற்றும் பெங்கால் டைகர் போன்ற பட்டப்பெயர்களை கொண்ட கங்குலி தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத நினைவென்றால் அது தான் அடித்த முதல் சதம் தான் என்று மனம் திறக்கிறார்.
1996 ம் ஆண்டில் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுக வீரனாக அறிமுகமாகிய கங்குலி,லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலேயே 131ரன்களை குவித்து இனிமேல் நான்தான் கிரிக்கெட் உலகின் தாதா என்ற முத்திரையை பதித்தார் . அது மட்டுமல்லாமல் அதே டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதமடித்து அசத்தினார்.
பின்னாட்களில் இந்திய அணியை ஒரு சிறந்த கேப்டனாக வழிநடத்தி பல கோப்பைகளை இந்தியாவிற்காக பெற்றுத்தந்தவர். இவரது கிரிக்கெட் வாழ்வில் பத்தாண்டுகளுக்கு முன்னர் தான் ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
பத்தாண்டுகளுக்கு பின்னர் எதேச்சையாக டிவியில் தான் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியை பார்த்த கங்குலி பழைய நினைவுகளில் மூழ்கியபடியே டிவிட்டரில் “நான் ஆடியதிலேயே மிகச்சிறந்த மறக்கமுடியாத நினைவென்றால் அது நான் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியும் அதில் நான் அடித்த முதல் சதம் தான்” என்று பதிவிட்டுள்ளார்.
At Office ..just saw star showing my first test hundred ..no better memories … pic.twitter.com/yK2J5Qktbl
— Sourav Ganguly (@SGanguly99) March 20, 2018