இறுதிப்போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது என்று அறிவித்து இருக்க கூடாது. ஐ.சி.சி இதையே செய்திருக்க வேண்டும் – நியூசி பயிற்சியாளர்

Gary

நடப்பு உலகக் கோப்பை தொடர் விசித்திரமான முடிவோடு முடிவடைந்துள்ளது. இரண்டு அணிகளும் சமமான ரன்களைக் குவித்து போட்டி டை ஆனது. உடனே சூப்பர் ஓவர் நடத்தப்பட்டு அந்த சூப்பர் ஓவரும் டை ஆனதால் எந்த அணி அதிக பவுண்டரிகள் அடித்ததோ அந்த அணி வெற்றி பெற்றது என்று முடிவெடுக்கப்பட்டு இங்கிலாந்து அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது.

England

பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது என்று அறிவித்தது தவறான முடிவு என்றும் ஐசிசியின் இந்த விதி குறித்து முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்தனர். ரசிகர்கள் பலரும் ஐசிசியின் இந்த விருதிற்கு விதிக்கு எதிராக தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டீட் உலக கோப்பை தொடர் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : சூப்பர் ஓவர் விதிகள் மட்டுமன்றி இன்னும் பல விதிகள் ஐசிசியின் விதிமுறை பட்டியலில் ஆய்வு செய்து மாற்றப்பட வேண்டியுள்ளது.

Eng-1

சூப்பர் ஓவரில் போட்டி சமனில் முடிந்த பட்சத்தில் இரு அணிகளுக்கும் கோப்பையை பகிர்ந்து அளித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் இங்கிலாந்து அணியை வெற்றி பெற்ற அணி என்று அறிவித்தது வருத்தம் அளிக்கிறது என்று கேரி ஸ்டீட் கூறினார்.

- Advertisement -
Advertisement