நடந்து வரும் 11 வது ஐ.பி.எல் தொடர் போட்டியில் விளையாடி வரும் தோனியின் ஆட்டத்தை கண்டு அனைவருமே வியந்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு ஐ.பி.எல் போட்டிகளில் நுழைந்த சென்னை அணியை தனது அபாரமான தலைமையின் மூலம் பிலே ஆப் சுற்றிற்கு பக்கத்தில் கொண்டுசென்றுவிட்டார் தோனி.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் சரியாக விளையாடாத தோனி பல்வேறு விமர்சங்களுக்கு உள்ளானர். இதனால் தனது கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்தார். பின்னர் இந்த ஆண்டு சென்னை அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற தோனி தனது கடிகராத்தை இரண்டு ஆண்டுகள் பின்னோக்கி சுழல வைத்து தனது பழைய ஆட்டத்திறனை மீண்டும் கொண்டுவந்தார்.
தோனி மீண்டும் பழைய பார்மிற்கு திரும்பியதால் அனைவரும் மகழ்ச்சியடைந்தனர். தற்போது ஐ.பி.எல் போட்டியில் பெங்களூரு அணியில் விளையாடி வரும் விராட் கோலியும் தோனியை இந்த பார்ம்மில் மீண்டும் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியிருந்தார். இந்நிலையில் தோனியின் பார்ம் குறித்து பிரபல முன்னாள் இந்திய பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தோனியின் பார்ம் குறித்து பேசிய கேரி கிர்ஸ்டன் “தோனியின் பார்ம் எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கிவில்லை, ஏனென்றால் அவர் எப்போதும் அற்புதமான விஷயங்களை செய்யக்கூடியவர். மேலும், தற்போது சென்னை அணி வலுவாக உள்ளது ஆனால் நாக் அவுட் சுற்றுகளில் தான் வேடிக்கையே இருக்கிறது. எந்த அணி இறுதிவரை பயணிக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் ” என்று கூறியுள்ளார்.