சச்சின் 2007 லயே அவரோட டார்ச்சர் தாங்காம ரிட்டயர்மண்ட் முடிவில் இருந்தாரு – கேரி கிர்ஸ்டன் கூறிய அதிர்ச்சி தகவல்

Kirsten
- Advertisement -

சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் உலகில் செய்யாத சாதனைகளே இல்லை என்று கூறும் அளவிற்கு அவ்வளவு சாதனைகளை படைத்து வைத்திருப்பது என்பது நாம் அறிந்ததே. கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடிய அவர் ஒரு கட்டத்தில் 2007 ஆம் ஆண்டு கிரிக்கெட்டை விட்டு சென்று விடலாம் என்று நினைத்து மிகவும் மன அழுத்தத்தில் இருந்ததாக ஒரு தகவலினை தற்போது இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதன்படி இந்திய அணியின் பயிற்சியாளராக 2007ஆம் ஆண்டு கிரேக் சேப்பல் இருந்தபோது சச்சின் டெண்டுல்கரை துவக்க வீரர் இடத்தில் இருந்து நீக்கி இரண்டாம் நிலையில் இறக்க முடிவு செய்தார். மேலும் இதன் மூலம் மூத்த வீரரான இவர் கடைசிவரை என்று அணியை வெற்றிக்கு இட்டுச் செல்ல முடியும் என்று அவர் நினைத்தார்.

ஆனால் அவரின் அந்த யோசனை சச்சினுக்கு அது மிகவும் பின்னடைவை தந்தது. 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. இதனால் கிரேக் சேப்பல் மீதும், ராகுல் டிராவிட் மீதும் கடும் பழி விழுந்தது. சச்சின் டெண்டுல்கர் முகபாவத்திலிருந்தே அவர் மிகவும் அழுத்தத்தில் இருப்பதாகவும் தெரிந்தது. சச்சின் சந்தித்த மோசமான காலகட்டங்கள் சேப்பல் பயிற்சியாளராக இருந்த காலகட்டம் தான் என்றும் பலரும் விமர்சித்தனர்.

Chappell

இந்நிலையில் சேப்பல் போன பிறகு அணிக்கு புதிய பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற பிறகு சச்சின் மீண்டும் எழுச்சி உற்றார். இது குறித்து கேரி க்ரிஸ்டன் கூறுகையில் : சச்சினுடன் ஒரு நீண்ட பயணத்தை நான் மேற் கொண்டு உள்ளேன். அப்போது சச்சின் இருந்த மனநிலை கூறவேண்டுமென்றால் கிரிக்கெட்டை விட்டு விட்டுப் போய்விட வேண்டும் என்றே கருதியிருந்தார்.

- Advertisement -

கடும் மன உளைச்சலிலும், அவர் விரும்பி விளையாடி வந்த வழக்கமான இடத்தில் இறங்க முடியாமல் கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் ஆட முடியவில்லை என்று அவர் கருதினார். நான் ஒன்றும் சச்சினுக்கு புதிதாக செய்யவில்லை அவர் விளையாடிய இடத்தில் அவரை மீண்டும் துவக்க வீரராக களம் இறங்கி விட்டேன். மேலும் அவரிடம் நான் இவ்வாறு விளையாட வேண்டும் அவ்வாறு விளையாட வேண்டும் என்று என்று எந்த அறிவுரையும் சொல்லவில்லை.

Kirsten 1

ஏனெனில் கிரிக்கெட்டை எப்படி ஆட வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அதன் பிறகு சச்சின் மூன்று ஆண்டுகளில் 19 செஞ்சுரிக்களை அடித்து நொறுக்கினார். மேலும் அங்கு அவர் விரும்பினாரோ அந்த இடத்துக்கே சென்றதால் 2011 ஆம் ஆண்டு நமக்கு கோப்பையும் அவர் பெற்றுக் கொடுத்தார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. சச்சின் மட்டுமின்றி கங்குலி, டிராவிட், கைப் என முன்னணி வீரர்களில் பலர் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்ததுக்கு சேப்பலின் பங்கு அதிகம் என்றால் அது மிகையல்ல.

Advertisement