ஆஷிஷ் நெஹ்ரா ஐ.பி.எல் கோச்சாக அசத்த இதுதான் காரணம். அவர் ஒரு சூப்பர் கோச் – கேரி கிறிஸ்டன் பாராட்டு

Nehra
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய 15-ஆவது ஐபிஎல் தொடரானது மே மாதம் 29-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற நிலையில் அறிமுக அணியாக இத்தொடரில் பங்கேற்ற ஹர்டிக் பாண்டியாவின் தலைமையிலான குஜராத் அணி தாங்கள் விளையாடிய முதல் சீசனில் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது. லீக் சுற்றின் முதல் போட்டியில் இருந்தே தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்திய குஜராத் அணியானது ப்ளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

- Advertisement -

மட்டுமின்றி முதலாவது குவாலிபயர் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றது. அதனை தொடர்ந்து மீண்டும் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இப்படி தாங்கள் விளையாடிய முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் அந்த அணிக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் குழுவிற்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் குஜராத் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஆசிஷ் நெக்ராவிற்கு அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளரான கேரி கிறிஸ்டன் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஆஷிஷ் நெஹ்ரா ஐபிஎல் தொடரில் ஒரு சிறந்த பயிற்சியாளராக இருக்கிறார்.

Gary Kristen Ashish Nehra

அவர் எனது மிகவும் நெருங்கிய நண்பர். நாங்கள் இருவரும் நீண்ட காலம் பயணம் செய்துள்ளோம். அவரைப் பற்றி எனக்கு எப்போதுமே நன்றாக தெரியும். ஒரு வீரராக மட்டுமின்றி அவர் ஒரு பயிற்சியாளராகவும் தற்போது மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குஜராத் அணிக்கு அவர் பயிற்சியாளராக அவரை அறிவிக்கும்போதே அவர் ஒரு மிகச் சிறந்த பயிற்சியாளராக தன்னை நிரூபிப்பார் என்பது எனக்கு தெரியும்.

- Advertisement -

நான் நினைத்தபடியே இம்முறை கோப்பையை கைப்பற்றும் அளவிற்கு அவர் உதவியுள்ளார். இப்படி அவர் ஒரு சிறப்பான கோச்சாக நெஹ்ரா இருப்பதற்கு ஒரே ஒரு காரணம் தான். எப்போதுமே அவர் கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமே அதிகம் பேசுவார். அதுமட்டுமின்றி அணியில் உள்ள வீரர்களை எவ்வாறு முன்னேற்றுவது, அவர்களின் நிறை குறைகள் என்ன என்று சிந்தித்து அதற்கு ஏற்றாற்போல் பயிற்சிகளை வழங்குவது என வீரர்களின் நலன் மீது மட்டுமே அக்கறை கொண்டிருப்பார்.

இதையும் படிங்க : தோனியிடம் இருந்து நான் இந்த ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள விரும்புகிறேன் – சிமர்ஜீத் சிங் வெளிப்படை

அதனால் அவரால் சிறப்பாக பயிற்சி அளிக்க முடிந்தது என்றும் இனிவரும் காலங்களிலும் அவர் ஐபிஎல் போட்டிகளின் மிகச் சிறந்த பயிற்சியாளராக இருப்பார் என்றும் கேரி கிர்ஸ்டன் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement