கோலி மீண்டும் இவர்களை டி20 அணியில் கொண்டுவர வேண்டும் – கங்குலி வேண்டுகோள்

Ganguly
- Advertisement -

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் டி20 உலககோப்பை தொடர் நடைபெற உள்ளதால் இந்திய அணி தற்போதுலிருந்தே இந்திய அணியை பலப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது. அதன்படி பத்தாவது வீரர் வரை பேட்டிங் செய்ய வேண்டும் என்று நினைத்து பேட்டிங் செய்யக்கூடிய சுழற்பந்து வீச்சாளர்களை இந்திய அணியில் இணைத்து கோலி தற்போது விளையாடி வருகிறார்.

chahal

- Advertisement -

இந்த திட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும் கோலி அதனை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். இந்திய அணி தற்போது டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் இந்திய அணியில் சில மாற்றங்கள் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணி 20 ஓவர்களில் சிறப்பாக விளையாடி வருவது சிறப்பான ஒன்றாகும்.

இருப்பினும் இறுதி வரை பேட்டிங் செய்ய வேண்டும் என்று கோலி எடுத்திருக்கும் முடிவு எனக்கு சற்று தவறான முடிவாக தெரிகிறது. ஏனெனில் 20 ஓவர்கள் போட்டிகளில் 40-50 ரன்கள் பாட்னர்ஷிப் வந்தாலே அது ஆட்டத்திற்கு போதுமானது. ஏனெனில் அந்த அளவுக்கு பெட்டிங் ஆதிக்கம் செலுத்தும் ஒரு போட்டியாக டி20 பார்க்கப்படுகிறது.

kuldeep-yadav

இந்த டி20 போட்டியில் இறுதி வரை பேட்டிங் என்பதெல்லாம் தேவையில்லாத ஒன்று. அதே சிறந்த பந்து வீச்சாளர்கள் இருந்தால் அந்த 20 ஓவரில் கூட அனைத்து விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். எனவே டி20 மேட்ச்வின்னர்களான விக்கெட் டேக்கர்ஸ் குல்தீப் மற்றும் சாஹல் ஆகியோர் அணிக்கு திரும்ப வேண்டும் ஏனெனில் இவர்கள் இருவரும் எதிரணியை கலந்து இருக்கக்கூடிய பந்துவீச்சாளர்கள் இவர்களது பந்து வீச்சை எதிர்கொள்ள எதிரணி வீரர்கள் திணறுவார்கள் என்று நான் நிச்சயம் நம்புகிறேன்.

chahal

தற்போது உள்ள அணியில் ஜடேஜா க்ருனால் பாண்டிய ஆகியோர் சிறப்பாக செயல்பட்டாலும் அவர்களை விட குல்தீப் மற்றும் சாஹல் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்துவார்கள். எனவே குல்தீப் மற்றும் சாஹல் ஆகியோரை உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு கொண்டுவந்தால் இந்திய அணி நிச்சயம் டி20 கோப்பையை வெல்லும் என்பதே என்னுடைய கருத்து. எனவே கோலி குல்தீப் மற்றும் சாஹல் ஆகிய இருவரையும் மீண்டும் டி20 அணிக்கு அழைத்து வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement