தோனியின் ஓய்வு குறித்த இந்த அறிவிப்பை நானே 24 ஆம் தேதி அறிவிக்கிறேன் – கங்குலி அதிரடி

Ganguly
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான தோனி உலக கோப்பை தொடருக்குப் பின் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. மேலும் உலகக்கோப்பை போட்டிகளுக்கு பின் தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் இதுவரை தோனி தனது ஓய்வு குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போது பிசிசிஐ தலைவராக தேர்வாகியுள்ள கங்குலி தோனி நிலை குறித்து கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : 24ஆம் தேதி நான் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு நேரடியாக சந்திக்க உள்ளேன். அப்போது தோனியின் நிலை குறித்து எடுக்கப்பட்டுள்ள முடிவை தெரிந்து கொள்வேன்.

அதன் பின்னர் தோனியின் எதிர்காலம் மற்றும் அவர் கிரிக்கெட் வாழ்க்கை குறித்த கருத்துக்களை நான் தெரிவிப்பேன். மேலும் தோனியின் விருப்பத்தை அறிய அவரிடமும் நான் பேச உள்ளேன். இந்த இரண்டு சந்திப்போம் முடிந்ததும் நான் உங்களுக்கு தோனி நிலை குறித்து அறிவிக்கிறேன் என்று கங்குலி கூறியிருக்கிறார்.

Ganguly

முன்னதாக தேர்வுக்குழு கூட்டம் 21ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கங்குலி 23-ஆம் தேதியே அதிகாரபூர்வ தலைவராக பதவி ஏற்க உள்ளதால் தற்போது இந்த கூட்டம் 24-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த கூட்டம் முடிவடைந்ததும் தோனி ஓய்வு குறித்து முழு விவரம் தெரியவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் பங்களாதேஷ் அணி பங்கேற்கும் தொடரிலும் தோனிக்கு வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.

Advertisement