Worldcup : உலகக்கோப்பை தொடரில் இந்தியாவிற்கு எதிராக இந்த அணியும் மல்லுக்கட்டும் – கங்குலி

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Ganguly
- Advertisement -

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

worldcup

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடர் குறித்து கங்குலி பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்த உலகக்கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்றும் அணி என்று இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு வாய்ப்பு உள்ளது என்று பலரும் கூறிவருகின்றனர். ஆனால், தற்போது அதைவிட பெரிய ஒரு இருட்டுகுதிரை ஒன்று பந்தயத்தில் வேகத்தை அதிகரித்து வருகிறது.

gayle

அவர்கள் யாரென்றால் வெஸ்ட் இண்டீஸ் அணிதான். கெயில், ரசல் என அதிரடியில் மிரட்டவும், ஹோல்டர் மற்றும் தாமஸ் என வேகத்தில் மிரட்டவும் மேலும் பல பலமான ஆல்ரவுண்டர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியில் உள்ளனர். ஆகையால் எந்த ஒரு அணியையும் எளிதில் வீழ்த்தும் பலம் அவர்களிடம் உள்ளது. எனவே, வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்திய அணி பக்குவமாக கையாண்டு விளையாடினால் மட்டுமே வெற்றி பெறமுடியும். மேலும், கோப்பையை கைப்பற்றும் திறமை கொண்ட சமபலம் வாய்ந்த அணியாகவே நான் வெஸ்ட் இண்டீஸ் அணியை கருதுகிறேன் என்று தெரிவித்தார்.

Advertisement