இந்தியாவில் திட்டமிட்டபடி ஐ.பி.எல் தொடர் நடக்குமா ? நடக்காதா ? – நேரடியாக பதிலளித்த கங்குலி

ipl
- Advertisement -

இந்தியாவில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை 14வது ஐபிஎல் சீசன் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்த தொடரை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் 6 நகரங்களில் மட்டுமே இந்த தொடர் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ipl

- Advertisement -

இந்த முழு தொடரில் மகாராஷ்டிராவில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றின் காரணமாக அம்மாநில அரசு பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மும்பையில் போட்டிகள் நடைபெறுமா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் பிசிசிஐயின் தலைவரான கங்குலி பேட்டியளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்தத் தொடர் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும் என்று உறுதி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த தொடரில் நிச்சயம் போட்டிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறும். மும்பை மைதானத்தில் 10 போட்டிகள் நடைபெற உள்ளன அந்த பத்து போட்டிகளும் பார்வையாளர்கள் இன்றி திட்டமிட்டபடி சரியாக நடைபெறும்.

Ipl cup

இந்த தொடரில் விளையாடும் வீரர்கள், நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் என அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்துவது குறிப்பாக ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ipl-2020

ஏற்கனவே டெல்லி கேப்பிடல் அணியின் ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல் மற்றும் பெங்களூர் அணியின் தொடக்க வீரரான தேவ்தத் படிக்கல், சென்னை அணியின் சமூக ஊடக நிர்வாகி மற்றும் மும்பை மைதானத்தில் ஊழியர்கள் என பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது இவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement