இந்தியாவில் மீண்டும் இந்த தொடரை நடத்த வாய்ப்பே இல்ல. ஓப்பனாக போட்டுடைத்த – சவுரவ் கங்குலி

Ganguly
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் தொடர் தொடங்கும்போது இந்தியாவில் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை காட்டிலும் அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்தது. மேலும் இதனை கோரோனாவின் இரண்டாம் அலை எனவும் மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.

RRvsSRH

- Advertisement -

ஐபிஎல் தொடர் துவங்கி இரு வாரங்களை கடந்து போது இந்தியாவில் கொரோனா உச்சத்தில் இருந்தது. மேலும் அதைவிட இனிவரும் பரவல் மோசமாக இருக்கும் என்று அனைவரும் எச்சரித்ததால் இந்த ஐபிஎல் தொடரை நடத்துவது அவசியமா ? என்றும் பல ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அப்போது ஒரு நாளைக்கு சுமார் 4 லட்சத்து 70 ஆயிரம் பேர் இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வந்தனர்.

ஒரு பக்கம் கொரோனா பரவல் இருந்தாலும் மறுபக்கம் மக்களின் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்களை சற்று ஆசுவாசப் படுத்துவதற்காக இந்த ஐபிஎல் நாங்கள் பாதுகாப்பாக நடத்துகிறோம் என்று பிசிசிஐ கூறியது. ஆனால் எதிர்பாராதவிதமாக வீரர்களிடையேயும் கொரோனா வைரஸ் பரவ இந்த தொடரானது பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த தொடரில் உள்ள எஞ்சியுள்ள 31 போட்டிகளை மீண்டும் எப்போது நடத்துவீர்கள் என்ற கேள்வி பிசிசிஐ தலைவரான சௌரவ் கங்குலியிடம் எழுப்பப்பட்டது. அதற்கு கங்குலி அளித்த பதில் தற்போது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கங்குலி இதுகுறித்துக் கூறுகையில் : இந்தியாவில் தற்போது இருக்கும் நிலைமையில் இந்த ஆண்டு இறுதிவரை ஐ.பி.எல் நடைபெறப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

Ganguly

இந்தியாவில் நிலைமை எப்போது கட்டுக்குள் வரும் என்று தெரியவில்லை இரண்டாவது அலை முடிந்து மூன்றாவது நிலை அக்டோபர் நவம்பர் மாதங்களில் வரும் என்று மருத்துவ குழுவினர் கூறியுள்ளதால் நிச்சயம் இந்தியாவில் இந்த தொடரை நடத்த வாய்ப்பு இல்லை என கங்குலி திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் நிச்சயம் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உலக கோப்பை டி20 தொடர் நடைபெறுவதற்கு முன்னர் நடத்தப்படும் என்று தெரிகிறது.

Advertisement