உலகக் கோப்பை தொடரின் 38வது போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 337 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக பேர்ஸ்டோ 111 ரன்களை குவித்தார். பென் ஸ்டோக்ஸ் 79 ரன்கள் குவித்தார்.
பிறகு 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 102 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்திய அணி இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியை இந்திய அணிக்கு இந்த தொடரின் முதல் தோல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து சவுரவ் கங்குலி பேட்டி ஒன்றை அளித்துள்ளார் . அதில் அவர் கூறியதாவது : இந்திய அணியின் தோல்விக்கு ஜாதவ் மற்றும் தோனி பேட்டிங் மட்டுமே காரணம் கிடையாது. இந்தியாவின் தோல்விக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதல் பத்து ஓவர் மற்றும் கடைசி 5 ஓவர்களில் இந்திய னியின் மோசமான பேட்டிங்கே காரணம். முதல் 10 ஓவர்களில் பவர்பிளேவில் ரோஹித் மற்றும் கோலி அதிரடியாக ஆடி இருக்கவேண்டும். அதேபோன்று கடைசி 5 ஓவர்களில் தோனி மற்றும் ஜாதவ் சிங்கிள் எடுத்ததை தவிர்த்து பவுண்டரிகளை அடிக்க முயற்சித்திருக்க வேண்டும் என்று கங்குலி கூறினார்.