தோனியால் சி.எஸ்.கே அணிக்காக சிறப்பாக ஆட முடியுமா ? முடியாதா ? – நேரடியாக பதிலை சொன்ன கங்குலி

Ganguly
- Advertisement -

மகேந்திர சிங் தோனி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 16 வருடங்கள் இந்திய அணிக்காக விளையாடியவர் சமீபத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவருக்கு தற்போது 39 வயது ஆகிவிட்டது. இதற்கு மேலும் நாம் சர்வதேச போட்டிகளில் நிற்கக் கூடாது என்று நினைத்து ஓய்வு பெற்று விட்டார். அதனை தாண்டி சென்ற வருட உலகக் கோப்பை தொடரில் இருந்து எந்தவிதமான தொழில்முறை போட்டியிலும் மகேந்திர சிங் தோனி ஆடவில்லை.

Dhoni

அதனால் சரியான டச்சில் இல்லாமல் இருந்து வருகிறார். அதனைத் தொடர்ந்து நேரடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக விளையாடத் தொடங்கி விட்டார். இதன் காரணமாக கடந்த சில போட்டிகளில் சரியாக விளையாட முடியாமல் தவித்து வருகிறார் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அதிலும் சில நேரங்களில் அடிக்கக்கூடிய பந்தை கூட விட்டு விடுகிறார் என்றும் கூறிவருகின்றனர் இதனை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

- Advertisement -

மேலும் லாக்டவுன் நாட்கள் மற்றும் குவாரன்டைன் நாட்கள் ஆகியவை கைகொடுக்கவில்லை என்றும் இத்தனை நாட்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்ததால் எனக்கு இன்னும் சரியான டச் வரவில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் இது குறித்து பேசியுள்ளார் சௌரவ் கங்குலி தோனி ஆட்டத்தை ஆட முடியுமா என்பது குறித்து கூறிய அவர் கூறுகையில்….

Dhoni

தோனி மீண்டும் தனது பழைய ஆட்டத்திற்கு திரும்ப சில போட்டிகள் கண்டிப்பாக தேவைப்படும். ஏறத்தாழ 18 மாதங்கள் எந்தவிதமான தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளும் விளையாடாமல் இருந்திருக்கிறார்.

Dhoni

ஒரு வீரர் எவ்வளவு பெரிய ஜாம்பவான் வீரராக இருந்தாலும் நீண்ட ஓய்வுக்கு பின்னர் திடீரென்று மைதானத்திற்குள் வந்து சிறப்பாக விளையாடுவது மிகவும் கடினம் என்று தெரிவித்துள்ளார் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

Advertisement