ஐயரின் பேச்சால் கங்குலிக்கு வந்த சிக்கல். சர்ச்சைகளுக்கு தனது ஸ்டைலில் முற்றுப்புள்ளி வைத்த தாதா – விவரம் இதோ

Ganguly-2
- Advertisement -

டெல்லி அணி கடந்த இரண்டு வருடங்களாக நன்றாக விளையாடி வருகிறது. இந்த வருட ஐபிஎல் தொடரிலும் பட்டையை கிளப்பி தற்போதுவரை முதல் இடத்தை பிடித்துள்ளது. சென்ற வருடம் தான் இந்த அணிக்கு ரிக்கி பாண்டிங் மற்றும் சௌரவ் கங்குலி ஆகியோர் ஆலோசகராகவும், பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த அணியின் ஆட்டம் அப்படியே மாறியது. அனைவரும் நன்றாக விளையாடத் துவங்கினார்கள். இந்த வருடமும் இந்த அணியை நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறது.

ganguly

- Advertisement -

பிசிசிஐ விதிப்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் ஒருவர் ஒரு பதவியில் இருந்தால் ஐபிஎல் தொடரில் வேலை செய்யக்கூடாது. தற்போதைய பி.சி.சி.ஐ யின் தலைவராக இருக்கும் கங்குலி இரட்டை ஆதாய பதவி வகிக்க முடியாது. அதனால் இந்தாண்டு டெல்லி அணியின் ஆலோசகர் பதவியினை துறந்தார். அதனால் இந்த ஆண்டு அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்கும், கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த சீசனில் தனது முதல் போட்டியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய டெல்லி அணி சூப்பர் ஓவர் வரை சென்று திரில் வெற்றியை பெற்றது. அந்த போட்டி முடிந்து பேசிய கேப்டன் ஐயர் கூறுகையில் : பாண்டிங் மற்றும் சௌரவ் கங்குலி ஆகியோர் கேப்டனாக நான் வளர்ச்சியடைய பெரும் உதவியாக இருந்தார்கள். அவர்கள் இருவரும் இப்போதும் என்னுடன் இருப்பது அதிர்ஷ்டம் என்று கூறியிருந்தார்.

ganguly 1

இந்த வார்த்தை பெரும் சர்ச்சையானது. பிசிசிஐ தலைவராக இருக்கும் கங்குலி எவ்வாறு டெல்லி அணியின் கேப்டன் அய்யருக்கு ஆலோசனைகளை வழங்கலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்த ஸ்ரேயாஸ் அய்யர் : தனிப்பட்டமுறையில் எனக்கு பாண்டிங் கங்குலி ஆகியோர் கேப்டனாக நான் முன்னேறுவதற்கு உதவி செய்தனர். அதைப் பற்றி தான் கூறினேன் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

ஐயர் கூறியபடி இந்தவருட ஐ.பி.எல் தொடரில் கங்குலி டெல்லி அணியில் இல்லையென்றாலும் கடந்த வருடம் அவர் அளித்த அறிவுரைகள் இப்போதும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது என்றே கங்குலி குறித்து ஐயர் அவ்வாறு தனது கருத்தினை தெரிவித்துள்ளார். மேலும் கங்குலி பி.சி.சி.ஐ தலைவர் பதவி ஏற்கும் முன் மைதானத்தில் பல இளம் செல்லி வீரர்களை போட்டி முடிந்ததும் கட்டியணைத்து வாழ்த்திய நிகழ்வுகளையும் நாம் கண்டுள்ளோம்.

iyer

இந்த விவகாரம் குறித்து தற்போது பேசியுள்ள கங்குலி கூறுகையில் : நான் ஷ்ரேயாஸ் ஐயருக்கு கடந்த ஆண்டு உதவி செய்தேன். நான் பிசிசிஐ தலைவராக இருக்கலாம் ஆனால் நான் 424 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. இளம் வீரர்கள் இடம் நான் எப்போது வேண்டுமானாலும் சென்று பேசுவேன். அது யாராக இருந்தாலும் ஐயராக இருந்தாலும் சரி, விராட் கோலி ஆக இருந்தாலும் சரி அவர்களுக்கு நான் உதவுவேன் என்று அதிரடியாக தனது பதிலை அளித்துள்ளார் கங்குலி.

Advertisement