இவ்ளோ பெரிய கேப்டனாக நான் பெயரெடுத்தும் கொல்கத்தா அணியை சிறப்பாக வழிநடத்த முடியாமல் போனதற்கு இவரே காரணம் – கங்குலி காட்டம்

Ganguly
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சௌரவ் கங்குலி இந்திய அணியை ஆக்ரோஷமாகவும் இளமைத் துடிப்புடன் செயல்படும் அணியாக மாற்றினார். மேலும் சூதாட்ட பிரச்சினையில் சிக்கி இந்திய அணி முற்றிலும் சிதைந்து தடுமாறியபோது அணியை புதிதாக கட்டமைத்து அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றவர் என்றால் அது கங்குலிதான் என்று சொன்னால் அது மிகையல்ல. அந்த அளவிற்கு அணியை வலுப்படுத்தினார்.

Ganguly 2

2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை இந்திய அணி இவரது தலைமையில் சென்றது. மேலும் இவரது தலைமையில் அணி வீரர்கள் சரியாக தேர்வு செய்யப்பட்டு இளம்வீரர்கள் ஜொலிக்க ஆரம்பித்தனர். அப்பேர்ப்பட்ட கங்குலியின் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2008 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் விளையாடியது. ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்தது போல அவரால் ஐபிஎல் போட்டியில் சரியாக சோபிக்க முடியவில்லை.

- Advertisement -

ஒரு முறை 100 ரன்களுக்குள் கொல்கத்தா அணி சுருண்டது. மேலும் கங்குலின் தலைமையில் கொல்கத்தா அணி 27 போட்டிகளில் பங்கேற்று 13 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அவரது கேப்டன்சி பெயரில் பெரிய கலங்கம் ஏற்பட்டது. 2011 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கங்குலி நிராகரிக்கப்பட்டு வெளியேறினார்.

Ganguly 1

அவருக்குப் பின்னர் கம்பீர் கொல்கத்தா அணியை தலைமை தாங்கி ஏழு வருடங்கள் விளையாடினார். இவரது தலைமையில் ஏழு முறையில் இரண்டு முறை அவர் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

- Advertisement -

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியை நிர்வகிக்க தனக்கு ஆரம்பத்தில் முழு சுதந்திரம் அளிப்பதாக கூறி அணியின் உரிமையாளர் ஷாருக்கான் என்னிடம் உறுதி அளித்தார். ஆனால் அவர் கூறியது போல அப்படி எந்த ஒரு அதிகாரமும் எனக்கு வழங்கப்படவில்லை. அணியில் யார் யாரை தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதில் பிறரின் தலையீடு அதிகமாக இருந்தது. ஒரு அணியாக சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் கேப்டனின் முடிவு உறுதியாக இருக்க வேண்டும்.

Sharukh

கேப்டனிடம் அனைத்தையும் கொடுத்தால் தான் அவர் சிறந்த அணியை உருவாக்க முடியும். உதாரணத்திற்கு சென்னை அணியை தோனிதான் நிர்வகிக்கிறார். தோனியைத் தவிர வேறு யாரும் வீரர்கள் தேர்வில் பங்கேற்பதில்லை. மேலும் மும்பையிலும் அதேபோன்றுதான் ரோகித் சர்மா கூறுவதையே அணி நிர்வாகம் செய்கிறது. இதனாலேயே அவர்கள் தொடர்ந்து சிறப்பாக முடிந்தது என்றும் தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement