இந்த வருட ஐ.பி.எல் தொடரில் புதிய விதிமுறைகளை கொண்டுவந்து அசத்திய கங்குலி – புதிய விதிமுறைகள் இதோ

Ganguly
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு 2020 பதின்மூன்றாவது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாத இறுதியில் துவங்குகிறது. இந்த தொடர் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்துவதற்காக ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

Ipl cup

- Advertisement -

இந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய பிசிசிஐயின் தலைவர் சௌரவ் கங்குலி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : இந்த முறை ஐபிஎல் போட்டிகளில் புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் போட்டி தொடங்கும் நேரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. மாலை 4 மணி மற்றும் இரவு 8 மணிக்கு போட்டி துவங்கும்.

மேலும் புதிய விதிமுறைகள் ஆக நோபாலுக்கு மூன்றாவது நடுவரை அணுகும் முறை அறிமுகமாகியுள்ளது. அதேபோல டெஸ்ட் போட்டியில் இருப்பதுபோன்று கன்கசன் வீரரை விளையாடவைக்கும் முறை அறிமுகமாகிறது. அதனால் போட்டியின் இடையே வீரருக்கு காயம் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக மற்றொரு வீரர் களம் இறங்கி விளையாட முடியும். ஐபிஎல் போட்டியின் இறுதிப் போட்டியை எங்கு நடத்தப் போகிறார்கள் என்ற விவாதங்களும் எழுந்தன.

mumbai

குஜராத் மாநிலத்தின் மோதிரா மைதானத்தில் நடத்தப்படும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் மே 29-ந் தேதி மும்பையில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடக்கும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை. போட்டியின் அட்டவணை போட்டி, துவங்குவது என அனைத்து விவரங்களும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விரைவில் வெளியிடுவார் என்று கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement