இந்த வருஷம் மட்டும் ஐ.பி.எல் நடக்கலனா எத்தனை கோடி இழப்பு தெரியுமா ? – கங்குலி வெளியிட்ட தகவல்

Ganguly
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு நடக்கவிருந்த ஐபிஎல் தொடரின் 13வது சீசன் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்களின் பெரும் கனவாக இந்த ஐபிஎல் தொடர் இருந்தது. இந்த தொடரில் விளையாடி விட்டால் பொருளாதார ரீதியில் தங்கள் வாழ்க்கையில் பிரச்சனை இல்லாமல் இருந்துவிடும் என்று பல வீரர்களும் நினைக்கின்றனர்.

Ipl cup

ஆனால், தற்போது வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீரர்களின் வருமானத்தில் சற்று அடி விழுந்துள்ளது. அதே நேரத்தில் பிசிசிஐயின் வருமானமும் அடிபட்டுள்ளது . அடுத்த 5 வருடங்களுக்கு போட்டியை தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக் கொள்ள பிசிசிஐ ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் கிட்டத்தட்ட 16000 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனத்திடம் வருடத்திற்கு 400 கோடி, என 1600 கோடி மற்றபடி சிறுசிறு ஸ்பான்சர்கள் இடம் 500 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் ஐபிஎல் தொடர் நடைபெறாவிட்டால் ஒரு வருடத்திற்கான இந்த தொகையில் அனைத்தும் திருப்பிக் கொடுக்கப்படும்.

iplstar

இவ்வாறு பார்த்தால் இந்த வருடம் ஐபிஎல் தொடர் நடக்கவில்லை என்றால் கிட்டத்தட்ட இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு 4 ஆயிரம் கோடிகள் இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது. இதனை சமீபத்தில் பிசிசிஐ தலைவராக இருந்த இருக்கும் சவுரவ் கங்குலியும் தெரிவித்தார். அப்படி ஐபிஎல் தொடர் நடத்தப்பட வில்லை என்றால் வீரர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்றும் சமீபத்தில் கங்குலி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

CskvsMi

ஏற்கனவே இந்த தொடரை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என பி.சி.சி.ஐ நிர்வாகம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரை நடத்த பி.சி.சி.ஐ விரும்பினால் எங்களது நாட்டில் நடத்தி கொள்ளலாம் என்று இலங்கை மற்றும் யூ.ஏ.இ நாடுகளும் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement