இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் நடைபெற இதனை செய்யவேண்டும் – கங்குலி ஓபன் டாக்

Ganguly
- Advertisement -

பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் போட்டிகள் நடந்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆகிறது. அதற்கு காரணம் யாதெனில் அந்த நாட்டில் நடக்கும் அரசியல் சூழல் மற்றும் தீவிரவாத பிரச்சனை காரணமாக மற்ற நாடுகள் அந்நாட்டிற்கு சென்று கிரிக்கெட் விளையாட விருப்பம் தெரிவிக்கவில்லை. தற்போதுதான் இலங்கை அணி பல ஆண்டுகளுக்குப் பிறகு சம்மதித்து கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது.

Pak

இந்நிலையில் இந்திய அணி பாகிஸ்தான் அணி இடையேயான ஒருநாள் தொடரில் கடைசியாக 2013ம் ஆண்டு விளையாடியது. அதன் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர் எதுவும் நடைபெறவில்லை. உலகக்கோப்பை, ஆசிய கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் பங்கேற்று விளையாடி வந்தனர்.

- Advertisement -

அதைத்தவிர இந்தியா பாகிஸ்தான் இடையே ஏழு ஆண்டுகளாக எந்த ஒரு தொடரும் நடைபெறவில்லை. இந்நிலையில் பிசிசிஐயின் புதிய தலைவராக சவுரவ் கங்குலி பதவியேற்ற பின் இந்தியா பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் உறவு மீண்டும் துளிர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து கொல்கத்தாவில் கங்குலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கங்குலி கூறியதாவது :

India v Pakistan

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. இரு அணிகளுக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது என் கைகளை கிடையாது. இந்த கேள்வியை இந்திய பிரதமர் மோடி இடமும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடமுமே கேட்க வேண்டும்.

Pakistan

ஏனென்றால் ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு பயணித்து கிரிக்கெட் விளையாட அந்நாட்டின் அரசு அனுமதி கொடுக்க வேண்டும். மேலும் கடந்த மாதம் பிப்ரவரி மாதம் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசமாக உள்ளது. எனவே இதுகுறித்து முறையான நடவடிக்கையை இருநாட்டு பிரதமர்களும் பேசி அவர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே போட்டிகளை நடத்த முடியும். மற்றபடி இருநாட்டு தொடர் குறித்து பேசுவதற்கு என்னிடம் எதுவும் இல்லை என்று கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement