காற்று மாசுபாட்டால் தடைபட இருக்கும் இந்திய பங்களாதேஷ் போட்டி – கங்குலி என்ன சொல்லிருக்கிறார் பாருங்க

Ganguly-2

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வங்கதேச அணி நேற்று இந்தியா வந்தடைந்தது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை டெல்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த டி20 போட்டி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வற்புறுத்தி வருகின்றனர். மேலும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் இதுகுறித்து கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார்.

டெல்லி போட்டி விட காற்று மாசு தான் தீவிர பிரச்சினையாக உள்ளது. எனவே டெல்லியில் வசிப்பவர்கள் இந்த விளையாட்டை விட காற்று மாசுபாட்டை தான் முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கம்பீர் கூறியிருந்தார். இதனால் இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ind

இந்நிலையில் இது குறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியதாவது : யார் என்ன சொன்னாலும் திட்டமிட்டபடி போட்டி டெல்லியில் நடக்கும், இதில் எந்தவித மாற்றமும் இல்லை. அதனால் போட்டி நடத்த திட்டமிட்ட அனைத்து விடயங்களும் சரிவர நடக்கும் கண்டிப்பாக இந்த போட்டி நடைபெறும் என்றும் கங்குலி தெரிவித்தார்.

- Advertisement -