- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சுனில் கவாஸ்கருக்கு அடுத்து இந்தியாவின் சிறந்த ஓப்பனர் இவர்தான் – சவுரவ் கங்குலி கருத்து

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் தொடர்ச்சியாக கிரிக்கெட் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக பி.சி.சி.ஐ-யின் தலைவராக இருந்த அவர் அந்த பதவியில் இருந்து விலகியதை அடுத்து வர்ணனையாளராகவும், கிரிக்கெட் தொகுப்பாளராகவும் தனது பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

கவாஸ்கருக்கு அடுத்து இந்திய அணியின் சிறந்த ஓப்பனர் :

அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற ஒரு கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற சவுரவ் கங்குலி இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரான சுனில் கவாஸ்கருக்கு அடுத்து யார்? இந்திய அணியின் சிறந்த ஓப்பனர் என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

- Advertisement -

அதில் சவுரவ் கங்குலி கூறியதாவது : என்னை பொறுத்தவரை சுனில் கவாஸ்கருக்கு அடுத்து இந்தி அணி கண்டெடுத்த மிகச் சிறந்த துவக்க வீரர் வீரேந்திர சேவாக் தான். கிரிக்கெட் வரலாற்றிலேயே அவரைப் போன்ற ஒரு அதிரடியான துவக்க வீரர்களை நான் பார்த்ததில்லை.

போட்டியின் எந்த சூழ்நிலையிலும் எந்த அணியாக இருந்தாலும் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை உலகில் உள்ள அனைத்து முன்னணி பவுலர்களுக்கு எதிராகவும் பயமற்ற ஆட்டத்தை விளையாடியது அவர் தான் என்று நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பயமற்ற ஆட்டம் இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

- Advertisement -

எந்த வகையான போட்டிகளாக இருந்தாலும் சரி, எப்படிப்பட்ட பந்துவீச்சார்களாக இருந்தாலும் சரி, ஒரே மைண்ட் செட்டில் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கக்கூடிய வீரராக அவர் தான் திகழ்ந்தார் என கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது. அவர் கூறியது போன்றே இந்திய அணிக்காக கடந்த 1999-ஆம் ஆண்டு அறிமுகமான சேவாக் 2013-ஆம் ஆண்டு வரை :

இதையும் படிங்க : அவர் மட்டும் தொடர்ந்து ஆடுனா இந்திய அணியின் அடுத்த கேப்டன் அவர்தான் – தினேஷ் கார்த்திக் பாராட்டு

104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,586 ரன்களையும், 251 ஒருநாள் போட்டியில் விளையாடி 8,273 ரன்களையும், 19 டி20 போட்டியில் விளையாடி 394 ரன்களையும் குவித்துள்ளார். அதோடு சர்வதேச கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 38 சதங்களையும், 72 அரைசதங்களையும் அவர் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -